பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா துடுப்பாட்ட அரங்கம் என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் லக்னோ நகரில் உள்ள ஒரு பன்னாட்டுத் துடுப்பாட்ட மைதானமாகும். இந்த அரங்கில் 50,000 பேர் அமரும் வசதி உள்ளது, இதனால் இது நாட்டின் ஐந்தாவது பெரிய சர்வதேச துடுப்பாட்ட மைதானமாகும் . முன்பு ஏகானா பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம் என்று அழைக்கப்பட்டது. இது இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக மறுபெயரிடப்பட்டது.
இந்தியாவில் உள்ள அனைத்து மைதானங்களுடன் ஒப்பிடுகையில் இந்த மைதானம் மிக நீண்ட நேரான எல்லைகளைக் கொண்டுள்ளது. இந்த அரங்கம் உத்தரப்பிரதேச கிரிக்கெட் அணியினதும் ஐபிஎல் அணியான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸினதும் உள்ளூர் மைதானமாகும்.
புகைப்படங்கள்
மறுசீரமைப்புக்கு முன்னர் வெளித்தோற்றம் (முதலாவது படம்); சூரியன் மறையும் நேரத்தில் வெளித்தோற்றம் (நடு); அரங்கின் உட்புறம் (இறுதி)
மேற்கோள்கள்