ஆனைகட்டி

ஆனைகட்டி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்த 24. வீரபாண்டி ஊராட்சியில் உள்ளது. ஆனைக்கட்டி கிராமம் கடல் மட்டத்திலிருந்து 431 மீட்டர் (1414 அடி) உயரத்தில், கோவை-கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள மலைவாழிடம் ஆகும். இங்கு நவீன தங்கும் விடுதிகள் உள்ளது. அனைக்கட்டிக்கு தென்மேற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் பகுதி அமைந்துள்ளது.

இது கோயம்புத்தூருக்கு வடமேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் அருகமைந்த தொடருந்து நிலையம் கோயம்புத்தூர் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும்.

இதன் அஞ்சலகம் சின்னதடாகத்தில் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 641108 ஆகும். ஆனைக்கட்டி கிராமம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

அர்ச வித்தியா குருகுலம்

ஆனைக்கட்டி கிராமத்தில் வேதாந்தக் கல்வி வழங்கும் அர்ச வித்தியா குருகுலத்தை சுவாமி தயானந்த சரசுவதி நிறுவியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!