Share to: share facebook share twitter share wa share telegram print page

அஞ்சாலை

அஞ்சாலை
புதைப்படிவ காலம்:Late Miocene–Recent
[1]
மாலத்தீவில் உள்ள அஞ்சாலை மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
கடல்மீன் வகையி
வரிசை:
குடும்பம்:
அஞ்சாலை

அஞ்சாலை அல்லது கடல் பாம்பு என்பது விலாங்கு இனத்தைச் சேர்ந்த ஒரு மீன் வகை ஆகும். இவை பெரும்பாலும் கடல்நீரிலேயே காணப்படுகின்றன. எனினும் ஒருசில மீன் வகைகள் நன்னீரிலும் காணப்படுகின்றன. இந்திய பெருங்கடலில் 57 வகையும், மன்னார் வளைகுடாவில் ஆறு வகை அஞ்சாலையும் காணப்படுகின்றன.

வகைகள்

கருப்பு அஞ்சாலை, புளியன் அஞ்சாலை, புள்ளி அஞ்சாலை, பூ அஞ்சாலை, வரி அஞ்சாலை, தவிட்டு அஞ்சாலை என்பன அவை. இதில், புள்ளி அஞ்சாலைக்கு சிறுத்தை அஞ்சாலை என்றொரு பெயர் உண்டு.

குணங்கள்

அஞ்சாலை மீன்கள் பவளப்பாறையின் இடுக்குகள், பொந்துகளில் மறைந்திருந்து வாழும். கடல் குச்சிகளை உண்டு வாழும் இவற்றின் குணம் விசித்திரமானதாகும். மீன் இனத்தைச் சேர்ந்தவை என்றாலும், மீன்களுக்குரிய செல்கள் இவற்றுக்கு இல்லை.

பாம்பின் தோற்றம் கொண்ட இவை 150 செ. மீ. நீளத்துடனும், கண் சிறியதாக இருக்கும் என்பதால் பார்வையும் குறைவாகவே இருக்கும். இரவில் மட்டுமே வெளியே வரும் இவை, வேட்டையாடி உண்ணும் வழக்கம் கொண்டவை.

மனிதனின் விரல்களைப் பார்த்தால் சதையை மட்டும் உறிஞ்சி உண்டுவிடும். இதனால் கடலுக்கடியில் வருபவர்கள் இவற்றை கண்டவுடன் தலைமறைவாகிவிடுவர். இவற்றை உணவாக யாரும் உட்கொள்வதில்லை. அலங்கார மீனுக்காக மட்டும் சிலரால் பிடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2009). "Muraenidae" in FishBase. January 2009 version.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya