ஹெஜாஸ்

ஹெஜாஸ்
அரபு மொழி: ٱلْـحِـجَـاز‎, romanized: Al-Ḥijāz
ஹிஜாஸ்
ஹெஜாஸ் பிரதேசங்கள்அல்-பக்கா, மக்கா, அல்-மதீனா, மற்றும் தபூக்

ஹெஜாஸ் (The Hejaz) அரபு மொழி: ٱلْـحِـجَـاز‎, romanized: al-Ḥijāz, lit. 'the Barrier'), தற்கால சவுதி அரேபியாவின் மேற்கில் செங்கடலை ஒட்டிய பிரதேசம் ஆகும். சௌதி அரேபியாவின் மேற்கு மாகாணம் ஹெஜாஸ் ஆகும். [1] ஹெஜாஸ் மாகாணத்தில், அனைத்துலக இசுலாமியர்களில் புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா உள்ளது. ஹெஜாஸ் மாகாணத்தின் பெரும் நகரம் ஜித்தா மற்றும் மதீனா ஆகும். [2] [3] .[4][5][6] வரலாற்றில் ஹெஹாஸ் பிரதேசம், சௌதி அரேபியாவின் பிற பிரதேசங்களிலிருந்து தனித்து விளங்கியது.[7] சௌதி அரேபியாவில் ஹெஜாஸ் பிரதேசம், மக்கள்தொகை நெருக்கம் மிகுந்தது. [8] 35% விழுக்காடு சௌதி மக்கள் ஹெஜாஸ் பிரதேசத்தில் வாழ்கின்றனர்.[9] அரபு மொழியின் ஹெஜாஸ் வட்டார வழக்கு மொழி இப்பகுதிகளில் பேசப்படுகிறது. சௌதி அரேபியாவில் ஹெஜாஸ் பிரதேசம் பன்னாட்டு மக்கள் வாழும் பிரதேசம் ஆகும்.[10]

எல்லைகள்

ஹெஜாஸ் மாகாணத்தின் மேற்கில் செங்கடலும், வடக்கில் ஜோர்டானும், கிழக்கில் நஜத் மாகாணமும், தெற்கில் அசீர் பிரதேசமும் எல்லைகளாக உள்ளது.[11]

ஹெஜாஸ் இராச்சியம்

1916-இல் மக்காவின் உசைன் அலி செரீப் தன்னை ஹெஜாஸ் இராச்சியத்தின் மன்னராக அறிவித்துக் கொண்டார். உதுமானியப பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் 1924-இல் ஹெஜாஸ் இராச்சியம், சௌதி அரேபியாவின் இணைக்கப்பட்டது.

படக்காட்சியகம்

அடிக்குறிப்புகள்

  1. Mackey, p. 101. “The Western Province, or the Hijaz[...]
  2. Hejaz
  3. திருக்குர்ஆன் 48:22–29
  4. திருக்குர்ஆன் 9:25–129
  5. திருக்குர்ஆன் 33:09–73
  6. திருக்குர்ஆன் 63:1–11
  7. Butler, J. W. S.; Schulte-Peevers, A.; Shearer, I. (2010-10-01). Oman, UAE & Arabian Peninsula. Lonely Planet. pp. 316–333.
  8. "Mecca: Islam's cosmopolitan heart". Archived from the original on 2018-12-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-17. The Hijaz is the largest, most populated, and most culturally and religiously diverse region of Saudi Arabia, in large part because it was the traditional host area of all the pilgrims to Mecca, many of whom settled and intermarried there.
  9. "Saudi Arabia Population Statistics 2011 (Arabic)" (PDF). p. 11. Archived from the original (PDF) on November 15, 2013. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 17, 2019. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
  10. Britain and Saudi Arabia, 1925–1939: The Imperial Oasis. p. 12.
  11. Merriam-Webster's Geographical Dictionary. 2001. p. 479. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0 87779 546 0. பார்க்கப்பட்ட நாள் 17 March 2013. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!