விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரி (Virudhunagar Hindu Nadars' Senthikumara Nadar College) என்பது தமிழ்நாட்டின், விருதுநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1947ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மதுரை காமராசர் பல்கலைக்கழக இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பிரிவுகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்
அறிவியல்
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பம்
- தாவரவியல்
- விலங்கியல்
- நுண்ணுயிரியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வர்த்தக மேலாண்மை
- வணிகவியல்
- வணிகவியல் கணினி பயன்பாடு
அங்கீகாரம்
இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்