வணிகம் அல்லது வர்த்தகம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும்.
வர்த்தகர்கள் பொதுவாக பணம் போன்ற கடன் அல்லது பரிமாற்ற ஊடகம் மூலம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். சில பொருளாதார வல்லுநர்கள் பண்டமாற்று (அதாவது பணத்தைப் பயன்படுத்தாமல் பொருட்களை வர்த்தகம் செய்தல் [1] ) வணிகத்தின் ஆரம்ப வடிவமாக வகைப்படுத்தினாலும், எழுதப்பட்ட வரலாறு தொடங்குவதற்கு முன்பே பணம் கண்டுபிடிக்கப்பட்டது. கடன் கடிதங்கள், வங்கித்தாள், பொருள் அல்லாத பணம் ஆகியவை வர்த்தகத்தை பெரிதும் எளிதாக்கியுள்ளன மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தியுள்ளன. ஏனெனில், வாங்குவதைவிற்பதில் இருந்து அல்லது வருவாயில் இருந்து பிரிக்கலாம். இரண்டு வர்த்தகர்களுக்கு இடையிலான வர்த்தகம் இருதரப்பு வர்த்தகம் என்றும், இரண்டுக்கும் மேற்பட்ட வர்த்தகர்களை உள்ளடக்கிய வர்த்தகம் பலதரப்பு வர்த்தகம் என்றும் அழைக்கப்படுகிறது.
வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது.
பண்டமாற்று முறை
பணமுறை
கைத்தொழில் புரட்சி
தகவல் தொழில்நுட்ப புரட்சி
மேற்கோள்கள்
↑Samuelson, P (1939). "The Gains from International Trade". The Canadian Journal of Economics and Political Science5 (2): 195–205. doi:10.2307/137133.
Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!