ராம் நாராயண் சக்ரவர்த்தி |
---|
பிறப்பு | 1916 மேற்கு வங்காளம், இந்தியா |
---|
இறப்பு | (2007-05-31)31 மே 2007 |
---|
பணி | தாவர வேதியியலாளர் கரிம வேதியியலாளர் |
---|
அறியப்படுவது | மருத்துவ வேதியியல் |
---|
விருதுகள் | பத்ம பூசன் |
---|
ராம் நாராயண் சக்ரவர்த்தி (Ram Narayan Chakravarti) (1916–2007) ஓர் இந்திய தாவர வேதியியலாளர் மற்றும் அறிவியலாளர் ஆவார். இவர் முந்தைய இந்திய பரிசோதனை மருந்தியல் நிறுவனத்தின் (தற்போதைய இந்திய வேதிய உயிரியல் நிறுவனம்) இயக்குநரும் ஆவார். இவர் மருத்துவ வேதியியல் அறிவியல் துறையில் அளித்த பங்களிப்புகளுக்காக நன்கறியப்பட்டவர் ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பும் பணிகளும்
இவர் 1916 ஆம் ஆண்டு பிறந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். கல்கத்தா வெப்பமண்டல மருந்தியல் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகவும், துணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். பின்னர் இந்திய பரிசோதனை மருந்தியல் நிறுவனத்தில் இயக்குநரானார். இவரது ஆய்வுகள் மருத்துவத் தாவரங்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இவர் தனது பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டும் ஆவணப்படுத்தியுள்ளார்.[2][3][4] இவர் வேதியியலுக்கான வேந்திய சங்கத்தின் உறுப்பினராகவும் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார்.[1]
விருதுகளும் நினைவுகூரலும்
அறிவியலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 1972 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் இவருக்கு இந்தியக் குடிமகன்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசன் விருதினை வழங்கி கெளரவித்தது.[5] தனது 91 ஆவது வயதில் 2007 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாள் இவர் மறைந்தார். மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுகலைப் படிப்புகளுக்கான நிறுவனம் (PGIMER) இவரது நினைவாக ஆண்டுதோறும் பேராசிரியர் ஆர். என். சக்ரவர்த்தி நினைவு பேருரை என்ற நிகழ்வை நடத்தி வருகிறது.[6]
மேற்கோள்கள்