யாழ்.இலக்கிய வட்டத்தின் இலங்கை இலக்கியப் பேரவை' 2008,2009 ஆண்டுகளில் நாடு பூராகவும் வெளியாகிய தமிழ் நூல்களை பரிசீலனை செய்து சிறந்த நூல்களுக்கு விருதும், பாராட்டுப் பத்திரமும் வழங்கும் நிகழ்வு ஜூன் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு நல்லூர் திருஞானசம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றது,.
இவ்விழாவுக்கு இலங்கை இலக்கிய பேரவைத் தலைவரும் மூத்த இலக்கியவாதியுமான செங்கை ஆழியான் கலாநிதி க.குணராசா தலைமை தாங்கினார். விழாவில் ஆசியுரையை நல்லை ஆதின குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரபரமாச்சாரிய தேசிக சுவாமிகள்,அருட்தந்தை டிக்சன் அடிகளார் ஆகியோர் வழங்கினார்கள். பரிசளிப்பு பேருரையை வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸும் , கவிஞர் ஐயாத்துரை ஞாபகார்த்த விருது வழங்கும் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த் துறைத்தலைவர் பேராசியர் எஸ்.சிவலிங்கராஜாவும் வழங்கினார்கள்..
2008 ஆம் வருடத்துக்கான விருதும் பாராட்டும் பெறும் நூல்கள்
- கவிதை - இதுநதியின் நாள் - ஸண்ஸியா
- சிறுவர் இலக்கியம் - சிறுவர் நீதிப் போதனைக் கதைகள் - வைரமுத்து சுந்தரேசன் (இருவருக்கான பரிசுகள்)
- நாடகம் - ஒரு கலைஞரின் கதை - கலைஞர் கலையார்வன்
- சமயம் - சிவபோதச் சிற்றுரை - மட்டுவில் அ.நடராசா
- சமயம் - இறைவிழுமியம் - அருட்தந்தை அ.ஸ்ரீபன் (இருவருக்கு பரிசுகள்)