மேற்கு ஐரியன் விடுதலை நினைவுச்சின்னம் அல்லது ஐரியன் ஜெய விடுதலை நினைவுச்சின்னம் (West Iriam Monument or Irian Jaya Liberation Monument) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அமைந்துள்ள ஒரு போருக்குப் பிந்தைய நவீனத்துவ நினைவுச்சின்னம் ஆகும். இது லேப்பாங்கன் பான்டேக்கின் மையத்தில் அமைந்துள்ள (இது முன்னர் வாட்டர்லூ சதுக்கம் என அழைக்கப்பட்டதாகும்.) மேற்கு நியூ கினியா தகராறைத் தொடர்ந்து 1963 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவின் ஜனாதிபதியாக இருந்த சுகர்னோ இந்த நினைவுச்சின்னத்தை நிறுவினார், இதில் இந்தோனேசியா மேற்கு நியூ கினியாவின் நிலப்பரப்பை நெதர்லாந்திலிருந்து பெற்றது.
விளக்கம்
மேற்கு ஐரியன் விடுதலை நினைவுச்சின்னம் லாபங்கன் பான்டெங்கின் மையத்தில் அமைந்துள்ளது, பூங்காவிலிருந்து சாலையின் குறுக்கே செயின்ட் உர்சுலா கத்தோலிக்க பள்ளியை நோக்கி மேற்கு முகமாக உள்ளது. இது முன்னதாக வாட்டர்லூ ப்ளீன் என்று அழைக்கப்பட்டது, இது காலனித்துவ நிர்வாகத்தின் அணிவகுப்பு மைதானமாக இருந்தது. [1]
நினைவுச்சின்னத்தின் மேல், 36 மீட்டர் உயரமான வெண்கல பீடமாகத் தெரியும் ஒரு அமைப்பு நிற்கிறது, [2] வெற்று மார்புடன், அடர்ந்த முடியையுடைய மனிதன் தனது கைகளிலிருந்த கை விலங்குகளை உடைத்தெறிந்து கால்களை அகலப் பரப்பி, கைகளை வானத்தை நோக்கி எதிர்கொள்கிறான். முகம் உரத்த, அலறல் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது, இது கிளர்ச்சியையும் சுதந்திரத்தையும் குறிக்கிறது.
வரலாறு
1950 களின் பிற்பகுதியிலும் 1960 களின் முற்பகுதியிலும், நெதர்லாந்து நியூ கினியாவின் மேற்குப் பகுதியைக் கொண்டிருந்தது, இந்தப் பிரச்சனை வட்ட மேசை மாநாட்டினைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து விவாதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றதைத் தொடர்ந்தும் பிராந்தியத்தை நெதர்லாந்தில் இணைத்ததைத் தொடர்ந்தும், சுகர்னோ இன்னும் பலமான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்தார், பின்னர் ட்ரைகோரா நடவடிக்கை போன்ற இராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாகினார். [3] 1962 இல் நியூயார்க் ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்த நிலத்தை இந்தோனேசியாவிடம் ஒப்படைக்க நெதர்லாந்து ஒப்புக்கொண்டது.
இந்த சிலை 1963 ஆகஸ்ட் 17 அன்று நாட்டின் 18 ஆவது சுதந்திர தினத்திலும், கட்டுமானம் தொடங்கிய ஒரு வருடத்திலும் அதிகாரப்பூர்வமாக நினைவுகூரப்பட்டது. இன்றைய நிலவரப்படி, இந்த நினைவுச்சின்னம் ஜகார்த்தாவின் பூங்கா சேவைகளின் பொறுப்பில் உள்ளது. [2]
வடிவமைப்பு
மேற்கு ஐரியன் இந்தோனேசியாவில் உண்மையான இணைப்பிற்கு முன்னர் 1962 ஆம் ஆண்டில் மேற்கு ஐரியன் விடுதலை நினைவுச்சின்னத்தின் சிலை உருவாக்கம் தொடங்கப்பட்டது. இந்த நினைவுச்சின்னத்தின் வடிவமைப்பு 1964-1965 வரை ஜகார்த்தாவின் துணை ஆளுநராக இருந்த கலைஞர் ஹென்க் நாகண்டுங்கின் ஒரு ஓவியத்தை அடிப்படையாகக் கொண்டது. நினைவுச்சின்னத்தின் வடிவமைப்பு காலனித்துவத்தின் சங்கிலிகளிலிருந்து விடுபட்டு ஆயுதங்களை நீட்டிய ஒரு தசைப்பிடிப்பான மனிதனைக் காட்டுகிறது. இந்த சிலையின் உத்வேகம் யோக்யார்த்தாவில் சுகர்னோ ஆற்றிய உரையில் இருந்து வந்தது என்று கூறப்படுகிறது, அதில் அவர் "மேற்கு ஐரியனை எந்த வகையிலும் விடுவிப்போம்" என்று அறிவித்தார். [4] வெண்கல சிலையானது சுமார் அதன் நீட்டிய விரல்களின் நுனி முதல் அடி வரை 11 மீட்டர்கள் (36 அடிகள்) உயரம் கொண்டதாகும். இந்த சிலை போருக்குப் பிந்தைய நவீனத்துவ பாணியில் 20 மீட்டர் (66 அடி) உயரமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 36 மீட்டர் (118 அடி) உயர அமைப்பு (சிலை மற்றும் பீடம்) லாபங்கன் பான்டெங்கின் மையத்தில் அமைக்கப்பட்டது.
வெண்கல சிலையை எடி சுனார்சோ தலைமையிலான அணி பெமதுங் கெலுவர்கா பகுதி யோககர்த்தா ( யோககர்த்தா பகுதி குடும்ப சிற்பிகள் குழு) செதுக்கியது . எடி சுனார்சோ ஜகார்தாவில் செலமாட் டடாங் நினைவுச்சின்னம் மற்றும் திரங்கடாரா நினைவுச்சின்னம் ஆகியவற்றையும் உருவாக்குவதில் ஈடுபட்டார். [5] சிலாபன் இந்த திட்டத்தின் வடிவமைப்பாளராக செயல்பட்டார். [2]
மேற்கு ஐரியன் விடுதலை நினைவுச்சின்னத்தின் இருப்பிடமானது கெமயோரன் விமான நிலையம் வழியாக ஜகார்த்தாவிற்கு வருகை தரும் மக்கள் கண்ட முதல் நினைவுச்சின்னமாக இருக்க வேண்டும் என்பதாக இருந்தது.
குறிப்புகள்