முதல் மாந்தர்

அறிவியலின் கருத்துப் படி மனிதர் படிவளர்ச்சி மூலம் வழிவந்தவர்கள். சிம்பான்சி குரங்கு இனத்தில் இருந்து 5–7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிளைவிட்டனர். அதன் பின் பல மனித இடை நிலை இனங்கள் இருந்து, தற்போதைய Homo sapiens 400,000 இருந்து 250,000 முன்னர் கிளை விட்டனர்.[1][2][3]

சமய நம்பிக்கைகள்

கிறித்தவ நம்பிக்கை

உலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதாம் ஏவாள் என்று பரவலாக நம்பப்படுகிறது. உலகில் தோன்றிய முதல் மனிதன் ஆதாம் என்றும் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியம் கூறுகிறது.

இசுலாமிய நம்பிக்கை

ஆதாமின் விலா எழும்புகளிலிருந்து ஏவாள்(பெண்) படைக்கப்பட்டதாகவும் குர் ஆன் கூறுகிறது. {quotes}

முதல் மனிதனை களி மண்ணிலிருந்து படைக்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

கடவுள் முதல் மனிதனை படைத்தப்பின் அவருக்கு சிரம் தாழ்த்துமாறு வானவர்களைப் பணித்தான். வானவர்கள் அனைவரும் அவருக்கு (ஆதாம்) சிரம் பணிந்தனர். ஆனால் அதுவரை வானவர்களின் தலைவராக இருந்த சைத்தான்(இப்லீஸ்) அவருக்கு சிரம் பணிய மறுத்தான்.

"மேலும், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறிய நேரத்தை (நினைத்துப் பாரும்.) இப்லீஸைத் தவிர (வானவர்கள் அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவனோ, “களிமண்ணால் நீ படைத்த வருக்கு நான் சிரம் பணிவதா?” என்று (கர்வத்துடன்) கூறினான்." – குர்ஆன்:17:61

"மேலும், நாம் வானவர்களை நோக்கி, ‘நீங்கள் ஆதமுக்கு சிரம் தாழ்த்துங்கள் (ஸஜ்தாச் செய்யுங்கள்)’ என்று கூறியபொழுது, இப்லீஸைத் தவிர அவர்கள் (அனைவரும்) சிரம் தாழ்த்தினர். (இப்லீஸாகிய) அவன் மறுத்தான்; (நானே பெரியவன் என்று) ஆணவங் கொண்டான்; மேலும், (அல்லாஹ்வின் கட்டளையை) நிராகரிப்போரில் அவன் ஆகி விட்டான்." – குர்ஆன்:2:34

இந்து நம்பிக்கை

இந்துப் புராணங்களின் கூற்றுப்படி படைப்புக் கடவுளான பிரம்மா மனதாலேயே சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் முதலான ரிஷிகளைப் படைத்து அவர்களை உலகில் மனித சமூகத்தை உண்டுபண்ணச் சொல்லியும் அதனால் பயனேதும் இல்லாதபடியால், கடைசியில் தன் உடம்பிலிருந்தே இரண்டு பாகம் தோன்றி ஒன்று சுவாயம்புவ மனு என்ற ஆணாகவும் மற்றொன்று சதரூபை என்ற பெண்ணாகவும் ஆகி அவர்களுடைய இனப்பெருக்கத்தினால் தான் பிற்பாடு மனித இனமே உருவாயிற்று என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வியாசர் எழுதிய அனேக புராணங்களில் இது சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு உதாரணத்திற்கு ஸ்ரீமத் பாகவதம் 3ம் ஸ்கந்தம், அத்தியாயம் 12, சுலோகங்கள் 52-56 ஐப் பார்க்கலாம்.

இது நடந்து ஏறக்குறைய 200 கோடி ஆண்டுகள் ஆகியுள்ளன என்ற ஒரு கணிப்பு கூறிகிறது.

மேற்கோள்கள்

  1. The Apocalypse of Moses, http://www2.iath.virginia.edu/anderson/vita/english/vita.lat.html#per39
  2. « Genesis of YAAB & YOP » narrated by « Armand Diouf » of Ndimaag (Senegal), [in] Gravrand, Henry, La Civilisation Sereer - Pangool, vol. 2. Les Nouvelles Editions Africaines du Senegal (1990), p. 204, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7236-1055-1
  3. Gravrand, Henry, La Civilisation Sereer - Pangool, vol. 2. Les Nouvelles Editions Africaines du Senegal (1990), pp. 204−5, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-7236-1055-1

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!