முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா

முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா
குசான்ஷா
முதலாம் குசான்ஷா உருவம் பொறித்த தங்க நாணயம், மெர்வி
குசான-சாசானிய இராச்சியத்தின் மன்னர்
ஆட்சிக்காலம்275–300
முன்னையவர்முதல் பெரோஸ் குசான்ஷா
பின்னையவர்இரண்டாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா
இறப்பு300
தந்தைமுதலாம் பக்ரம்
மதம்சொராட்டிரிய நெறி
குசான-சாசானிய ஆட்சியாளர் முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா உருவம் பொறித்த தங்க நாணயம், (ஆட்சிக் காலம்:கிபி 277- 286)

முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா (Hormizd I Kushanshah) தெற்காசியாவின் குசான-சாசானிய இராச்சியத்தின் புகழ்பெற்ற மன்னர் ஆவார்.[1] இவர் குசான-சாசானிய இராச்சியத்தை கிபி 275 முதல் கிபி 300 முடிய 25 ஆண்டுகள் இராச்சியத்தை ஆண்டார். இவரை இரண்டாம் பக்ரம் எனபவர் கிபி 300-இல் போரில் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினார்.

கீழே உள்ள சிற்பத்தில் இரண்டாம் பக்ரம் (இடது), முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷாவை (வலது) போரில் வெல்லுதல். மேல் உள்ள சிற்பத்தில் இரண்டாம் பக்ரம், உரோமானியர்களை வெல்லும் காட்சி

குசான-சாசானிய இராச்சியத்தின் மன்னரான இவரது ஆட்சிக் காலத்தில் தான் முதன்முதலாக தங்க நாணயங்கள், மன்னர்கள் உருவம் பொறித்து வெளியிடப்பட்டது. பின்னர் இவரது வம்சத்தினரும் தொடர்ந்து தங்க நாணயங்களை, தங்கள் உருவத்திற்குப் பின்பக்கத்தில் சிவனின் உருவத்தைப் பொறித்து வெளியிட்டனர்.

நாணயம்

சிவ வேடத்தில் முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா உருவம் பொறித்த தங்க நாணயம்

காபூல் போன்ற இடகளில் தங்க நாணயச் சாலைகளை அமைத்தார். மன்னர் முதலாம் ஹோர்மிஸ்டு குசான்ஷா சொராட்டிரிய நெறியைக் கடைபிடித்தவராக இருப்பினும்,குசான் பேரரசினர் போன்று, தாம் வெளியிட்ட தங்க நாணயத்தில், தன் உருவத்தை சிவன் வடிவத்தில், கையில் சூலாயுதமும், பின்புறம் நந்தியும் இருப்பது போல் வெளியிட்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Rezakhani 2017, ப. 81.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!