முதலாம் மொக்கல்லானன்

முதலாம் மொக்கல்லானன் அல்லது முதலாம் முகலன் (பொ.பி. 497 -515) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்தில் மூன்றாம் மன்னனாவான். இவனது மாற்றாந்தாய் மகனான முதலாம் காசியப்பன் (பொ.பி. 479 - 497) மௌரிய மன்னர்கள் வம்சத்தில் முதலாமனவனும் மொக்கல்லானன் மற்றும் காசியபனின் தந்தையுமானவனான தாதுசேனன் என்பவனைச் சிறையில் அடைத்து கொன்றும் விட்டு அரசக்கட்டிலில் ஏறியவன். காசியப்பனின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனும் ஆட்சிக்கு ஏற வேண்டிய பட்டத்து இளவரசனான இந்த மொக்கல்லானன் தன் தந்தையைக் காசியப்பன் கொன்றுவிட்டதை அறிந்தவுடன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றான். அவன் திரும்பி வந்து தன்னைத் தாக்கக் கூடும் என்றெண்ணிய காசியப்பன் சீகிரியா (தற்போதுள்ள அநுராதபுரத்திலிருந்து தென்கிழக்கே இருக்கும் சீகிரியா) என்னும் மலைக்கோட்டை அரண்மனையைக் கட்டி அங்கிருந்து அரசாண்டான். இவனுடைய பதினெட்டாம் ஆட்சியாண்டில் இவன் எதிர்பார்த்தபடியே முதலாம் மொக்கல்லானன் தன் நண்பர்களான தமிழ்நாட்டு நிகந்தர்களை இணைத்துக் கொண்டு படையெடுத்து வந்தான். தான் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தவுடன் காசியப்பன் தன் வாளால் தன் தலையை வெட்டி தற்கொலை செய்து கொண்டான். அதன் பிறகு முகலனே இலங்கையை அரசாண்டான்.[1]

மேலும் தன் தந்தையான தாதுசேனனை கொல்ல காசியப்பனுக்கு உதவியாய் இருந்த 1000 பேர்களையும் முகலன் கொன்றுவிட்டான். மற்ற சில பேர்களின் மூக்கையும் காதையும் அறுத்து அவர்களை நாடு கடத்தியும் விட்டான். இதனால் தமிழகத்திலிருந்து தன் மீது படையெடுத்து வருவார்கள் என்பதையறிந்த இவன் பல ஏற்பாடுகளை செய்து இலங்கையை 18 ஆண்டுகள் அரசாண்டான்.[2] இவனுக்குப் பிறகு இவனுடைய மூத்த மகனான குமார தாதுசேனன் என்பவன் இலங்கையை அரசாண்டான்.

மேற்கோள்கள்

  1. சூல வம்சம், 39ஆம் பரிச்சேதம், 1 - 28
  2. சூல வம்சம், 39ஆம் பரிச்சேதம், 29 - 58

மூலநூல்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!