பீமதேவன் I அல்லது முதலாம் பீமதேவன் (Bhimdev I) தற்கால குஜராத் நாட்டைபொ.ஊ. 11ஆம் நூற்றாண்டில் ஆண்ட சோலாங்கி குல அரசன். பீமதேவன் சோமநாதபுரம் சிவன் கோயிலை கருங்கற்களால் கட்டினான். பின் மன்னன் பீமதேவன் இறந்த பின், அவரது மனைவி உதயமதி, பீமதேவனின் நினைவாக, அகில்வாட் எனும் பதான் நகரத்தில் அழகிய படிக்கட்டுகளுடன் கூடிய ஒருபெரிய படிக்கிணற்றை அமைத்து, அதன் முன் ஒரு சூரியன் கோயிலை அமைத்தார்.[1][2] உதயமதி பீமதேவனின் நினைவாக அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் ஒரு குளத்தை அமைத்தார். அக்குளத்திற்கு ராணியின் குளம் என்று அழைக்கிறார்கள்.