முதலாம் நந்திவர்மன் என்பவன் இடைக்காலப் பல்லவர்களுள் ஒருவன்.
காலம்
இவனது தந்தையான மூன்றாம் கந்தவர்மன் காலம் கி.பி. 460-475 என்பதாலும், விட்ணுகோபன் ஈறான அரசர் பலர் இறந்தபின் பிறந்தவன்: சிவபிரான் அருளால் வன்மை மிக்க நாக அரசனை நடனம் செய்வித்தான் என்று ஐந்தாம் நூற்றாண்டு பட்டயம் கூறுவதாலும் இவனது காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் மத்தியில் அமைந்தது எனக் கொள்ளலாம்.[1]
நாக அரசன்
தென்னிந்தியாவில் சூட்டுநாகர், கதம்பர், சாளுக்கியர் ஆகியவர்களே தங்களை நாகர்கள் எனக்கூறினர்.[2] இவர்களில் சூட்டுநாகர் இந்த நந்திவர்மன் காலத்தில் மறைந்துவிட்டனர். இரவிவர்மனுக்குப் பின் வந்த கதம்பர் போர் செய்ததாக குறிப்புகள் இல்லை. அதனால் அக்காலத்தில் அதிகம் போரிடுவர்களாக அறியப்படும் சாளுக்கியர்களில் ஜெயசிம்மன் அல்லது இரணதீரனே அந்த நாக அரசனாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.
மேற்கோள்கள்
- ↑ Michael D Rabe. (1997). The Māmallapuram Praśasti: A Panegyric in Figures, Artibus Asiae, Vol. 57, No. 3/4 (1997), pp. 189-241.
- ↑ தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், ப 510