முதல் திருவந்தாதி(Mutal Tiruvantati)வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி பொய்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் இது அந்தாதி அமைப்பில் இயற்றப்பட்டது, 100 பாசுரங்களைக் கொண்டது,[1] பொய்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இப்பாசுரம் “ வையம் தகளியா வார்கடலே நெய்யாக” என்னும் வரியை முதலடியாக கொண்டு துவங்குகிறது.[2] இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.[3]