முதலாம் ஜாய் மாணிக்கியா (Joy Manikya I) (இறப்பு 1577) 1573 முதல் 1577 வரை திரிபுரா இராச்சியத்தை ஆண்ட அரசனாவார்
வாழ்க்கை
உதய் மாணிக்கியாவின் மகனான இவர், திரிபுராவின் முந்தைய ஆளும் வம்சத்தை மாற்றியமைத்து 1567 இல் அதன் அடையாளத்தை ஏற்றுக்கொண்டார். இவரது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, ஜாய் 1573இல் அரியணை ஏறினார்.[2] இருப்பினும், இவரது ஆட்சி பெயரளவில் மட்டுமே இருந்தது. இவரது தந்தைவழி அத்தையின் கணவராக இருந்த சக்திவாய்ந்த தளபதி ரணகன் நாராயண், இராச்சியத்தின் உண்மையான கட்டுப்பாட்டை வைத்திருந்தார்.[3] ஜாய் ஒரு பொம்மை-மன்னராகவே இருந்தார்.[4][5]
நாராயண் இறுதியில் முன்னாள் அரச குடும்பத்தின் இளவரசரான அமர தேவன் என்கிற அமர் மாணிக்கியாவின் மக்கள் செல்வாக்கைக் கண்டு பொறாமை கொண்டார். [6] அமரதேவன் இரவு உணவிற்கு அழைக்கப்பட்டு அங்கு அவரைக் கொல்ல திட்டமிட்டார். இருப்பினும், அமரதேவன் தப்பித்து, தனது ஆதரவாளர்களைத் திரட்டி, தனது எதிரியின் தலையை வெட்டினார். நாராயணனின் மரணத்திற்கு ஜாய் விளக்கம் கேட்டபோது, அமர தேவன் மன்னருக்கு எதிராக தனது படைகளை அனுப்பினார். ஜாய் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அமர தேவனால் கொல்லப்பட்டார். [7] ஜாயின் மரணம் 1577 இல் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இவர் சுமார் 4 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[8]அமரதேவன் பின்னர் அமர் மாணிக்கியா என்ற பெயரில் ஆட்சியைப் பிடித்தார். இதனால் அரியணையை அசல் ஆளும் வம்சத்திடம் வந்து சேர்ந்தது. [4]
சான்றுகள்