முதலாம் சேட்டதிச்சன்

முதலாம் சேட்டதிச்சன் (பொ.பி.267 - 277) என்பவன் இலங்கையை ஆண்ட முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதினேழாமானவன். முதலாம் லம்பகர்ண அரசர்களுள் பதிமூன்றாமானவனான விசயகுமாரன் (பொ.பி. 247 - 248) ஆட்சியின் போது இருந்த தலைமை அமைச்சர்களுள் மூன்றாமானவனான இருந்த கோதாபயன் என்பவனே இவனது தந்தையாவான். இவன் சங்கமித்ரர் என்ற சோழ நாட்டு மகாயான பௌத்தம் என்ற பௌத்தப் பிரிவினர்களின் மதத்தலைவரின் சீடனாவான்.

சங்கமித்ரர்

சங்கமித்ரர் என்பவர் மகாயான பௌத்தம் என்ற பௌத்த மதப்பிரிவின் சோழநாட்டுத் தலைவராவார். இலங்கையைச் சேர்ந்த மகாயான பௌத்த பிக்குக்கள் இலங்கையிலிருந்து தேரவாத பௌத்தம் பிரிவைச் சேர்ந்த பிக்குக்களால் கோதாபயன் காலத்தில் நாடுகடத்தப்பட்டனர். இதை கண்டிப்பதற்காகவும் இலங்கையில் மகாயான பௌத்தத்தை பரப்புவதற்காகவும் சங்கமித்ரர் கோதாபயன் அரண்மனைக்குச் சென்று அங்கிருந்த தேரவாத பௌத்த பிக்குகளிடம் சமயவாதம் செய்து வென்றார். அந்த பிக்குகளையும், கோதாபயன் மற்றும் அவன் இரு மகன்களையும் மகாயான பௌத்தத்தைத் தழுவச் செய்தார். அதன் பிறகே கோதாபயனின் முதல் மகனான இச்சேட்டதிச்சன் இலங்கைக்கு அரசனானான். அதனால் மித்ரர் சேட்டனுக்கு குருவானாலும் இருவருக்கும் பகை இருந்தது. அதனால் சங்கமித்ரர் இவனது ஆட்சியில் சோழ நாட்டிலேயே இருந்தார்.

மூலநூல்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!