முதலாம் குவாகா என்றும் அழைக்கப்படும் கோவிந்த-ராஜா (Govindaraja I) (ஆட்சி சுமார் 809-836 பொ.ச. ), சாகம்பரி சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். கூர்ஜர-பிரதிகார பேரரசர் இரண்டாம் நாகபட்டனின் ஆட்சியாளராக வடமேற்கு இந்தியாவில் உள்ள இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை இவர் ஆட்சி செய்தார்.
வரலாறு
சாகம்பரி அரசர் மூன்றாம் பிருத்விராஜனின் (வழக்கமான நாட்டுப்புற புராணங்களில் பிருத்திவிராச் சௌகான் என்று அழைக்கப்படுகிறார்) வாழ்க்கையைப் பற்றிய ஒரு புகழ்ச்சியான சமசுகிருத காவியமான "பிருத்விராஜ விஜய"த்தின் கூற்றுப்படி, கோவிந்த ராஜா, சாகம்பரி அரசர் முதலாம் துர்லபராஜாவின் மகனும் வாரிசுமாவார். இருப்பினும், பிஜோலியா மற்றும் ஹர்ஷநாத் கோயில் கல்வெட்டுகள் துர்லபராஜாவின் வாரிசுக்கு "குவாகா" என்று பெயரிடுகின்றன. இது "கோவிந்தா" என்ற பெயரின் வடமொழி மாறுபாடாகத் தோன்றுகிறது.
ஹர்ஷநாத் கல்வெட்டு, கோவிந்தன், பிரதிகார பேரரசர் இரண்டாம் நாகபட்டாவுடன் அடையாளம் காணப்பட்ட நாகவலோக மன்னரின் ஆட்சியாளராக இருந்ததாகக் கூறுகிறது. மேலும் இவர் ஒரு போர்வீரராக புகழ் பெற்றார் என்றும் கூறுகிறது. ஆனால் எந்த குறிப்பிட்ட போர்களையும் குறிப்பிடவில்லை.
வம்சத்தின் குலதெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹர்ஷநாத கோயிலின் கட்டுமானம் கோவிந்தனால் ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அது இவரது வாரிசுகளின் ஆட்சியின் போது மட்டுமே அதன் முழு வடிவத்தை அடைந்தது. கோவிந்தனுக்குப் பிறகு இவரது மகன் இரண்டாம் சந்திரராஜா ஆட்சிக்கு வந்தார்.
சான்றுகள்
உசாத்துணை