முதலாம் கோபாலன்

முதலாம் கோபாலன்
ஆட்சிக்காலம்கி.பி 750 முதல் கி.பி 770 வரை
முன்னையவர்யாருமில்லை
பின்னையவர்தர்மபாலன்
அரசமரபுபாலப் பேரரசு
தந்தைவப்யாதா

முதலாம் கோபாலன் என்பவர் பாலப் பேரரசினை வங்காளத்தில் கி.பி 8-ம் நூற்றாண்டில் நிறுவினார். இவரது பெயரில் உள்ள கடைசியில் உள்ள பால என்னும் சொல் பாதுகாவலன் என்பதை குறிக்கும். இவரை தொடர்ந்து அரசாள வந்தவர்கள் பால என்னும் அடைமொழியை கொண்டனர். இவர் கி.பி 750-ஆம் ஆண்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தார். இவர் தான் வங்காளத்தின் முதல் சுதந்திர அரசன் அவார்.

தொடக்கம்

கோபாலனின் தெளிவான வாழ்கையை பற்றி மூலம் கிடைக்கப் பெறவில்லை. இவரைப் பற்றி பிற்காலத்திய இலக்கிய மேற்கோள்களிலும் கல்வெட்டுகளிலும் மட்டுமே தகவல்கள் கிடைத்திருகின்றன. இவரின் தந்தைப் பெயர் வப்யாதா மற்றும் இவரது பாட்டனார் பெயர் தயிதவிஷ்ணு.[1] இத்தகவல்கள் கலிம்பூர் செப்பு பட்டயத்தில் கண்டெடுக்கப்பட்டது.

தேர்தல்

கௌட மன்னன் சௌசாங்கா இறந்த பிறகு வங்காளத்தில் சரியான ஆட்சி ஒரு நூற்றாண்டு காலமாக அமையவில்லை. குழப்பமும் அராஜகமும் நிறைந்த காலமாக இருந்தது. இந்த காலகட்டத்தை சமஸ்கிருதத்தில் மிட்ச சயனம் என கலிம்பூர் பட்டயம் குறிபிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தான் கோபால கி.பி 750-இல் ஆட்சியை கைப்பற்றினார். இவர் நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக திபெத்திய பௌத்தர் இயாமா தரந்தா, 800 ஆண்டுகளுக்கு பின்னர், கூறியுள்ளார். ஆனால் ஒரு சிலர் கோபால தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசனாக முடிசூட்டப்பட்டார் எனவும் கூறுகின்றனர்.

ஆட்சிகாலம்

தர்மபாலவின் கீழ் பாலப் பேரரசு

கோபால 27 வருடங்கள் ஆட்சி செய்த பின் தனது எண்பதாவது அகவையில் இறந்தார் என "மஞ்சுசிரிமுலகல்பா" என்னும் நூல் கூறுகிறது.[2] இவருடைய வாழ்க்கை பற்றி முழுமையாக தெரியவில்லை. ஆனால் இவர் இறக்கும் போது இவருடைய மகனான தர்மபாலவிற்கு ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு சென்றார். தர்மபால தன் தந்தை விட்டு சென்ற அரசை இன்னும் வளர்த்து அக்கால இந்தியாவில் ஒரு பேரரசாக உருமாற்றினார்.

மதம்

இவர் பௌத்த மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

சான்றுகள்

  1. AM Chowdhury, Dynastic History of Bengal, Dhaka, 1967
  2. Pramode Lal Paul (1939). The Early History of Bengal (PDF). Indian History. Indian Research Institute. p. 36. Archived from the original (PDF) on 2014-03-29. பார்க்கப்பட்ட நாள் 2014-03-28.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!