முதலாம் குமாரவிட்னு என்பவன் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர் மன்னர்களுள் ஒருவன்.
காலம்
இவனது காலம் பற்றி போதிய ஆதாரங்கள் இல்லை எனினும் இவன் பல்லவர் மரபினுள் ஐந்தாம் ஆனவன் என்றும் இவனது சோழதேசப் படையெடுப்பின் காலத்திலேயே காஞ்சி சோழர்களின் ஆட்சியிலிருந்து பல்லவர் ஆட்சிக்கு மாறியது[1] என்று ஆராய்ச்சியாளர்கள்[2] கூறுவதைக் கொண்டும் இவனது காலம் பொ.பி. 250 - 350களுக்குள் அடங்கிடும் என்பதை அறியலாம்.
மேற்கோள்கள்
- ↑ வேலூர்ப்பாளையம் தகடுகள்
- ↑ Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: An attempt to unify the Pallava Pedigrees of the Inscriptions, Indian Historical Research Institute