முதலாம் இராசமல்லன்

முதலாம் இராசமல்லன் (816–843) என்பவன் மேற்குக் கங்க மரபைச் சேர்நத மன்னனாவான்

கங்க நாட்டின் நிலை

இவனுக்கு முன்னிருந்த இரண்டாம் சிவமாறன் சிறைப்பட்டிருந்த காலத்திலேயே கங்கநாடு இராட்டிரக்கூட மன்னர்களால் பிடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கங்கர்களுக்கு ஆதரவாக இருந்த நுளம்பர்கள் விலகி, இராட்டிரகூடர்களின் ஆதரவுடன் மேலும் சில கங்க நாட்டு பகுதிகளைப் பெற்று தங்கள் நுளம்பப்பாடியுடன் இணைத்துக் கொண்டனர்.

நுளம்பர்களுடன் உறவு

நுளம்பர்களுடன் நல்லுறவை விரும்பிய இராசமல்லன் நுளம்பாதிராசனின் தங்கையை மணந்தான். தன் மகள் ஜெயபீயை போலால்சோர நுளம்பனுக்கு மணம் முடித்தான்.

உசாத்துணை

தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டிணன். பக்.181

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!