முதலாம் இந்திரவர்மன்

முதலாம் இந்திரவர்மன்
கெமர் பேரசின் அரசன்
ஆட்சிக்காலம்877/878 – 889/890
முன்னையவர்மூன்றாம் செயவர்மன்
பின்னையவர்முதலாம் யசோவர்மன்
இறப்பு889/890
தந்தைபிரித்திவீந்திரவர்மன்
தாய்பிரித்திவீந்திரதேவி

முதலாம் இந்திரவர்மன் (Indravarman I) பொ.ச. 877/878 மற்றும் 889/890 இடையே அரிகராலயாவிலிருந்து ஆட்சி செய்த கெமெர் பேரரசின் ஆட்சியாளனாசான்.

வரலாறு

கி.பி. 25 சனவரி 880 திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட பிராசாதப்ர கோ கோவிலின் கல்வெட்டுகளின்படி ( அடித்தளக் கல்) [1] இறந்த மூன்று மன்னர்களுக்கும், அவர்களது இராணிகளுக்கும் ஒரு வகையான "நினைவுக் கோவிலாக" இவனால் கட்டப்பட்டன.இதனை கோபுரங்களின் கதவு சட்டங்களில் உள்ள கல்வெட்டுகளில் காணலாம். மத்திய கோபுரங்கள் இரண்டாம் செயவர்மனுக்கு அவனது மரணத்திற்குப் பிந்தைய பெயரான பரமேசுவரன், அவனது மனைவி தரணீந்திர தேவி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.[2] வடக்குக் கோபுரம் அவனது தாத்தாவும் பாட்டியுமான உருத்ரவர்மன் (உருத்ரேசுவரன்), இராசேந்திரதேவி ஆகிய இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தெற்கு கோபுரங்கள் பிருதிவீந்திரவர்மன் (பிருதிவீந்திரேசுவரன்), பிருதிவிந்திர தேவி ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. [3]

முதலாம் இந்திரவர்மனின் மனைவி, இந்திராதேவி, சம்புபுரம், வியாதபுரம், அனிந்திதபுரம் (பனன் இராச்சியம்) போன்ற அரச குடும்பங்களின் வழித்தோன்றல் ஆவாள்.[4] :110–111

இவன் 889 இல் இறந்தான். மரணத்திற்குப் பின் ஈஸ்வரலோகம் என்ற பெயரைப் பெற்றான் மேலும் இவனது மகன் முதலாம் யசோவர்மன் பதவிக்கு வந்தான்.[4]:111

சான்றுகள்

  1. Bhattacharya, 2009, pp. 25-41
  2. Pou, 2002, pp. 55-57
  3. Pou, 2002, pp. 41-43
  4. 4.0 4.1 The Indianized States of Southeast Asia.

குறிப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!