பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியர்களின் பார்வையை, வட சர்க்கார் பகுதியிலிருந்து திருப்புவதற்கு, ஐதராபாத் நிசாம் இரண்டாம் ஆசப் ஷா, பிரித்தானிய கம்பெனிப் படைகளை, மைசூர் இராச்சிய சுல்தான் ஐதர் அலி மீது தந்திரமாகத் திருப்பியதால் முதலாம் மைசூர் போர் ஏற்பட காரணமாயிற்று.
தென்னிந்தியாவில் பிரித்தானியர்கள், ஐதராபாத் நிசாம் மற்றும் ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலாஜா]]வுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளின் மூலம் ஆங்கிலேயர்கள் தென்னிந்தியாவில் வலுவாக தடம் பதித்தனர்.
1761ல் உடையார் வம்சத்திடமிருந்துமைசூர் இராச்சியத்தின் ஆட்சி நிர்வாகத்தை ஐதர் அலி கைப்பற்றினார்.[2] இந்நிலையில் மராத்தியப் பேரரசு, ஐதராபாத் நிசாம், ஐதர் அலியின் மைசூர் இராச்சியம், ஆற்காடு நவாப் ஆகியோர், பிரித்தானிய மற்றும் பிரெஞ்ச் கிழக்கிந்தியக் கம்பெனிப் படைகளின் ஆதரவுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முயன்றனர். தென்னிந்தியாவில் இவ்வாட்சியாளர்களின் ஒற்றுமை இன்மையைப் பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்களும், பிரெஞ்சியர்களும், உள்ளூர் இராச்சியங்களுக்கு நிதியுதவி, போர் பயிற்சி மற்றும் நவீன போர் தளவாடங்களை அளித்தும் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டனர்.[3]
போரின் காரணங்கள்
பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை மற்றும் கல்கத்தா பகுதிகளை இணைப்பதற்கு வசதியாக வட சர்க்கார் பகுதிகளை கைப்பற்ற முயன்றனர்.
இந்நிலையில் ஐதர் அலிக்கு எதிராக ஐதராபாத் நிசாம் மற்றும் மராத்திய பேஷ்வாமாதவராவ் ஆகியோர் உடன்படிக்கை செய்து கொண்டு, 1765ல் மைசூர் இராச்சியத்தின் எல்லைகளை முற்றுகையிட திட்டமிட்டனர்.
1766ல் வடசர்க்கார் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் சென்றதைத் தாங்கிக் கொள்ள இயலாத ஐதராபாத் நிசாம், சென்னையில் ஆங்கிலேய கம்பெனி நிர்வாகிகளுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பினார். [5]
இருப்பினும் நவம்பர் 1766ல் ஐதராபாத் நிசாம், ஆங்கிலேயர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, வடசர்க்கார் பிரதேசத்தின் ஐந்து மாவட்டங்களில் குண்டூர் மாவட்டம் மட்டும் ஐதராபாத் நிசாமிற்கு விட்டுத் தரப்பட்டது.[6] மேலும் ஒப்பந்தப்படி, ஆங்கிலேயர்களின் இரண்டு படையணிகள் ஐதராபாத் நிசாமின் உதவிக்கு அனுப்பப்பட்டது.
ஆற்காடு நவாப்முகமது அலி கான் வாலாஜாவிற்கும், ஐதர் அலிக்கும், தமிழ்நாட்டுப் பகுதிகள் தொடர்பான பிணக்குகள் உண்டாயிற்று. சென்னை பிரித்தானிய கம்பெனி நிர்வாகிகள், ஐதர் அலிக்கு எதிராக, ஆற்காடு நவாப்பிற்கு ஆதரவாக போர்ப்படைகள் வழங்கியது.
போரின் போக்குகள்
.
முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் 1767ல் துவங்கியது. மராத்தியர்களும், நிசாம்களும் ஐதர் அலியின் இராச்சியத்தின் வடக்குப் பகுதிகளை தாக்கி முற்றுகையிட்டபோது, மராத்தியர்களுக்கு 30 இலட்சம் ரூபாய் வழங்கி அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார் ஐதர் அலி. இதனால் மராத்தியர்கள் தங்கள் படைகளை கிருஷ்ணா ஆற்றின் வடகரையில் நின்றுவிட்டது.
ஐதராபாத் நிசாம் தனது படைகள் மற்றும் ஜோசப் ஸ்மித் தலைமையிலான இரண்டு ஆங்கிலேய படையணிகளுடன் பெங்களூரை தாக்கினார்.[7]
இந்நிலையில் நிசாமும், ஐதர் அலியும் இரகசியமாகச் செய்து கொண்ட உடன்படிக்கையை அறிந்த ஆங்கிலேயப் படைத்தலைவர் கர்ணல் ஜோசப் ஸ்மித் தனது படைகளை ஆற்காடு நவாப் பிரதேசத்தின் எல்லைக்கு அனுப்பினார்.[7]
ஐதர் அலி, ஆங்கிலேயர்களுக்கு 18 இலட்சம் ரூபாய் போர் இழப்புத் தொகை அளிக்க வேண்டியதாயிற்று.
ஐதராபாத் நிசாமின் அறிவுரையின் படி, திப்பு சுல்தான் மைசூர் மன்னராக அறிவிக்கப்பட்டார். நிசாம்-திப்பு சுல்தான் கூட்டணியின் 70,000 படைகள் ஐதர் அலியில் தலைமையில், சங்கமா எனுமிடத்தில் 7,000 பேர் கொண்ட கர்ணல் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலேயப் படைகளை முற்றுகையிட்டது.[8][9]
நிசாம்-ஐதர் கூட்டணிப் படைகள் போரில் படுதோல்வியடைந்தது. போரில் ஐதர் அலி, தற்கால கிருஷ்ணகிரி மாவட்டத்தின் காவேரிப்பட்டணம் எனுமிடத்திலிருந்து தப்பிச் சென்றார்.[8][10] செப்டம்பர் 1767ல் நடைபெற்ற திருவண்ணாமலை சண்டையில், ஐதர் அலி ஆங்கிலேயர்களை வெற்றிகரமாக முறியடித்து திருவண்ணாமலையைக் கைப்பற்றினர்.[11]கூடுதல் படைகளுடன் வந்த ஆங்கிலேயர்கள், நவம்பர் 1767ல் நடைபெற்ற ஆம்பூர் போரில் ஐதர் அலி தோற்கடிக்கப்பட்டார்.[12][13]ஆங்கிலேயர்களின் குதிரைப்படையின் வேகத்தை தாங்கிக் கொள்ள முடியாத ஐதர் அலி, நிசாமின் படைகளுடன், தனது படைகளையும வடக்கு நோக்கி நகர்த்தினார்.[14] ஐதர் அலி மற்றும் நிசாமின் போர்த்திறமைகள் தோற்றதால், ஆங்கிலேயர்கள் வடசர்கார் பகுதிகளில் முன்னேறினர்.
இந்நிலையில் ஆங்கிலேயர்கள் நிசாமுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதால், ஐதருக்கும் நிசாமிக்கும் இடையே பிளவு உண்டானது.
1768ல் ஐதர் அலி ஆங்கிலேயர்களுடன் போர் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்த போது, ஆங்கிலேயர்கள் அதனை மறுத்தனர்.[15]
பிப்ரவரி 1768ல் பிரித்தானியப் படைகள் மங்களூரைக் கைப்பற்றினர்.[16] இதனால் ஐதர் அலி ஆற்காடு பகுதிகளிலிருந்த தனது படைககளை மலபார் பகுதிகளுக்கு வேகமாகத் திருப்பிவிட்டார்.
தனது மகன் திப்பு சுல்தானை முன்னிலைப் படுத்தி, ஐதர் அலி பின்னிருந்து மைசூர் படைகளை நடத்தி, மீண்டும் மங்களூரை ஆங்கிலேயர்களிடமிருந்து கைப்பற்றினார்.[16][17] மேலும் ஆங்கிலேயர்களுக்கு உதவிய நாயர் சமூத்தினருக்கு தண்டவரி விதித்தார். அ[17]
ஆனால் ஆங்கிலேயர்கள் தெற்கில் ஐதர் அலியின் திண்டுக்கல் பகுதியை கைப்பற்றினர்.[18] 1768ல் ஐதர் அலி மலபாரில் இருந்த நேரத்தில், மராத்திய பேஷ்வாக்களுடன் கூட்டு சேர்ந்த ஆங்கிலேயக் கர்ணல் ஸ்மித், ஆகஸ்டு 1768ல்[19]பெங்களூரைக் கைப்பற்றினர். [20]மலபாரிலிருந்து பெங்களூருக்கு படைகளுடன் திரும்பி வந்த ஐதர் அலி, 22 ஆகஸ்டு 1768 நடைபெற்ற ஹோஸ்கோட் சண்டையில் ஆங்கிலேயர்களுக்கு உதவிக்கு வந்த மராத்தியப் படைகளுக்கு பலத்த சேதம் ஏற்படுத்தினார்.[21]
பிரித்தானியக் கம்பெனிப் படைகளுடன் வந்த ஆற்காடு நவாப் மற்றும் ஐதராபாத் நிசாம் படைகளைக் கண்ட ஐதர் அலி, படைகளுடன் பெங்களூரிலிருந்து குர்ரம்கொண்டா நோக்கி நகர்ந்தார்.[22]பெங்களூரை முற்றுகையிட்ட கம்பெனிப் படைகளிடம், ஐதர் அலி பத்து இலட்சம் ரூபாய் வழங்கி போர் அமைதி ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வந்தார்.
பிரித்தானிய கம்பெனி படைத்தலைவர்கள், ஐதராபாத் நிசாம் மற்றும் ஆற்காடு நவாப்முகமது அலி கான் வாலாஜா ஆகியோருக்கும் போர் ஈட்டுத் தொகை வழங்க ஐதர் அலியைக் கட்டாயப்படுத்தினர். இதனை ஐதர் அலி ஏற்காததால் போர் ஒப்பந்தம் முறிவடைந்தது. [22]
3 அக்டோபர் 1768ல் ஐதர் அலி தனது படைகளை குர்ரம்கொண்டாவிலிருந்து பெங்களூர் நோக்கி வருகையில், ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலாஜாவின் படைகள் மற்றும் கம்பெனி படைகள், ஊஸ்கோட்டா அருகே உள்ள முல்வாகல் கோட்டை அருகே சூழ்ந்து கொண்டது. [23] மூல்வாகல் கோட்டை போரில் ஐதர் அலி படையில் 1,000 வீரர்களும்; கம்பெனி படையில் 200 வீரர்களும் மாண்டனர். [24] இருப்பினும் ஐதர் அலியை வெற்றி கொண்டு பெங்களூரை கம்பெனிப் படைகளல் கைப்பற்ற இயலவில்லை. [25]
இந்நிலையில் ஐதர் அலி ஓசூர் பகுதியைக் கைப்பற்றினார். பின்னர் தற்கால கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாகலூரை கம்பெனி படைகளிடமிருந்து கைப்பற்றினார். கம்பெனி படைகள் வெங்கடகிரி (நெல்லூர் மாவட்டம்) மலைக்கு தப்பி ஓடியது.[26]
நவம்பர் 1768ல் ஐதர் அலி தனது படைகளை இரண்டாகப் பிரித்து, ஒரு படைப்பிரிவு மேற்கு தொடர்ச்சி மலைகளை ஊடுருவி, கம்பெனிப் படைகள் வசமிருந்த பகுதிகளை கைப்பற்றியது.
பின்னர் ஈரோட்டை நோக்கி வரும் வழியில், கம்பெனி படைவீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக்கி ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தார் ஐதர் அலி.
29 மார்ச் 1769 செய்து கொண்ட சென்னை ஒப்பந்தப்படி, கம்பெனி நிர்வாகமும், ஐதர் அலியும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதில்லை எனப் போர் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.[28][29]