முதலாம் அர்தசிர் (Ardashir I or Ardeshir I) இவர் கிபி 224-இல் பாரசீகத்தின்பார்த்தியப் பேரரசர் நான்காம் அரதபனாசை வென்று சாசானியப் பேரரசை நிறுவியவர் என அறியப்படுகிறார். [1]. இவர் தன்னை மன்னாதி மன்னன் (ஷா இன் ஷா) அறிவித்துக் கொண்டார்.[2]முதலாம் அரதசிர் சாசானியப் பேரரசை கிபி 224 முதல் கிபி 242 முடிய 18 ஆண்டுகள் ஆண்டார். பேரரசர் அர்தசிர் தன்னை பாரசீகக் கடவுள் அகுரா மஸ்தாவின் அருள் பெற்றவர் என நிறுவினார். சொராட்டிரிய நெறி பாரசீகப் பெரும் கடவுள் அகுரா மஸ்தா பேரரசர் அர்தசீருக்கு, குதிரை மீதமர்ந்தவாறே மகுடம் வழங்குவது போன்ற சிற்பத்தை பாறையில் செதுக்கினார்.
Christensen, A. 1965: "Sassanid Persia". The Cambridge Ancient History, Volume XII: The Imperial Crisis and Recovery (A.D. 193–324). Cook, S.A. et al., eds. Cambridge: University Press, pp 109–111, 118, 120, 126–130.