மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி (மலாய்: Parti Bersatu Sasa Malaysia (BERSAMA); ஆங்கிலம்: Malaysia United People's Party (MUPP) என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும்.
முன்பு இந்தக் கட்சி (மலாய்: Parti Demokratik Setiahati Kuasa Rakyat Bersatu Sabah (SETIA) என்று அழைக்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் பெயர் இரு முறைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.[1][2][3][4]
இந்தக் கட்சி, 1994 ஆம் ஆண்டு, சுகாய்டின் லங்காப் என்பவரால் சபா மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.[5] தேசியவாத அரசியல் கட்சியாக இருந்தாலும் பல்லின மக்கள் உறுப்பியம் பெறுவதற்கு கட்சியின் சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
சபா மாநிலத் தேர்தல்களில் எதிரணிக் கட்சியாக விளங்கியுள்ளது.[6][7][8] 2011 மார்ச் 23-இல் இக்கட்சியின் செத்தியா எனும் அழைப்புப் பெயர் பெர்சாமா என்று மாற்றப்பட்டது.