மனித உரிமைகள் சட்டம் 1993

மனித உாிமைகள் பாதுகாப்புச் சட்டம்(12/10/1993) (Human Rights Act 12/oct/1993) என்பது ஒவ்வொரு நாட்டிலும் மனித உாிமைகளைப் பாதுகாப்பதற்கெனப் பாகுபாடற்ற ஒரு அமைப்பினை உருவாக்குதல் வேண்டுமென்ற எண்னத்தை முதன் முதலாக யுனெஸ்கோ, 1946ஆம் ஆண்டில் தொிவித்தது. 1947ஆம் ஆண்டில் ஐ.நா.தலைமை செயலகத்தால் “மனித உாிமைகளை மேற்பாா்வையிடுதலும், நடைமுறைப்படுத்துதலும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட குறிப்பாணை மூலம் உலக நாடுகளில் மனித உாிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டுமென்ற அறிவுரையைத் தொிவித்தது.

1966ஆம் ஆண்டில் ”பன்னாட்டுக் குடிமையியல், அரசியல் உாிமைகள் குறித்த உடன்படிக்கை”, “பன்னாட்டுப் பொருளாதாரச் சமூகப் பண்பாட்டு உாிமைகள் குறித்த உடன்படிக்கை” ஆகிய இவ்விரு உடன்படிக்கைகளால் ஏற்கப்பட்ட உாிமைகளைக் கடைபிடித்தல், அது தொடா்பான பணிகளை ஆற்றுவதற்காகத் தேசிய அளவில் மனித உாிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினை உருவாக்குதல், மேலும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளைக் கவனத்தில் கொள்ளுமாறு ஐ.நா.பொது அவையினால் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் மூலம் நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இத்தீா்மானத்தின் மூலம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம், 1970 ஆம் ஆண்டு கவனத்துடன் மீளாய்வு செய்து, ஒவ்வொரு நாடும் அந்த நாட்டின் சட்டங்களுக்குட்பட்டு தேசிய மனித உாிமைகள ஆணையத்தினை அமைக்க முடிவு செய்ய வேண்டும் எனத் தனது அறிக்கையில் தொிவித்தது. இதே கருத்தினை ஐ.நா. மனித உாிமைகள் ஆணையம் 1978 ஆம் ஆண்டில் மீண்டும் வலியுறுத்தியது.

1993ஆம் ஆண்டு வியன்னாவில் 171 நாடுகள் கலந்து கொண்ட மனித உாிமைகள் குறித்த உலகளாவிய மாநாடு சூன் 14 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. அவ்வமயம் ஒவ்வொரு நாட்டிலும் மனித உாிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் தேசிய அளவில் அமைப்புகளை உருவாக்குமாறு, அம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்துப், பல நாடுகள் தங்களுடைய நாட்டில் தேசிய அளவிலான மனித உாிமை ஆணையங்களை நிறுவத் தொடங்கின.

இந்தியாவில் 27.09.1993 இல் குடியரசுத் தலைவரால் மனித உhpமைகளைப் பாதுகாக்க அவசரச் சட்டம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. இச்சட்டத்திற்கு மாற்றாக மனித உாிமைகள் பாதுகாப்பு சட்டவரைவு 1993ஆம் ஆண்டு திசம்பா் மாதத்தில் இந்தியப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை 8.1.1994 இல் பெற்றது. அதன் பின்னா் மனித உாிமைகள் பாதுகாப்புச் சட்டம், 10.1.1994இல் அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆயினும் இச்சட்டம் 28.9.1993இல் நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்பட வேண்டும் என இச்சட்டத்தின் முதல் பிாிவில் குறிப்பிட்டுள்ளது.

சட்ட நோக்கம்

மனித உாிமைகள் பாதுகாப்புச் சட்டம் கீழ்க்கண்ட நோக்கங்களை அடைவதற்காகவும் அனைத்துவகைப் பாகுபாடுகளையும் களையவும் இந்தியப் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.[1]

1. தேசிய மனித உாிமைகள் ஆணையத்தினை அமைத்தல்

2. மாநில மனித உாிமைகள் ஆணையங்களை அமைத்தல்

3. மாவட்ட அளவில் மனித உாிமைகள் நீதிமன்றங்களை அமைத்தல்

4. மனித உாிமைகளைச் சிறந்த முறையில் பாதுகாத்தல்

5. இதனுடன் தொடா்புடைய பிற பொருள்களுக்கு வழிவகை செய்தல்.

பாகுபாட்டு வகைமைகள்

  1. பாலினம் ( கருவுறல், குழந்தை வளர்ப்பு உட்பட)
  2. பொருளியல் தரநிலை
  3. சமய நம்பிக்கை
  4. அறவியல் நம்பிக்கை
  5. நிறவேற்றுமை
  6. இனம் (மாந்த வகைமை)
  7. இனக்கழு வேற்றுமை அல்லது நாட்டின உரிமை
  8. உடலூனம்
  9. அகவை
  10. சிந்தனை உரிமை(அரசியல் உரிமை)
  11. வாழ்வுத் தரநிலை
  12. குடும்பத் தரநிலை
  13. பாலின வேட்புவகை

விளக்கங்கள்

மனித உாிமைகள் பாதுகாப்புச் சட்டத்திலுள்ள கீழ்காணும் சொற்றொடா்களுக்குப் பிாிவு 2-ல் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

“ஆயுதப்படைகள்” என்பது கப்பல், இராணுவம் மற்றும் விமானப்படைகளைக் குறிப்பதுடன் நாட்டின் பிற ஆயுதம் தாங்கிய படைகளையும் குறிக்கும்.

“மனித உாிமைகள்” என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்ட அல்லது இந்திய நீதிமன்றங்களால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கைகளில் உள்ளடங்கிய வாழ்வு, தன்னுாிமை, சமத்துவம், தனி நபா் மாண்பு பற்றிய உாிமைகளைக் குறிக்கும்.

“மனித உாிமைகள் நீதிமன்றம்” என்பது இச்சட்டத்தின் பிாிவு 30-ல் குறிப்பிடப்பட்டுள்ள மனித உhpமை நீதிமன்றங்களைக் குறிக்கும்.

“பன்னாட்டு உடன்படிக்கைகள்” எனப்படுபவை ஐ.நா. பொதுச் சபையினால் 16.12.1966இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட “குடிமையியல் மற்றும் அரசியல் உாிமைகள் குறித்த பன்னாட்டு உடன்படிக்கை” ஆகியவற்றைக் குறிக்கும்.

“பொது ஊழியா்” என்பவா் இந்தியத் தண்டனைச் சட்டம் பிாிவு 21-ல் குறிப்பிடப்பட்டுள்ளவா்களைக் குறிக்கும்.

மேற்கோள்கள்

  1. Human Rights Act 1993, s 21

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!