பெண்ணிய வணிகங்கள் (Feminist businesses) என்பது பெண்ணிய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்களால் நிறுவப்பட்டு பெண்ணிய இயக்க செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களைக் குறிக்கிறது. [1] பெண்ணிய புத்தகக் கடைகள், பெண்ணிய கடன் சங்கங்கள், பெண்ணிய அச்சகங்கள், மற்றும் பெண்ணிய உணவகங்கள் ஆகியவை சில குறிப்பிடத்தகுந்த உதாரணங்களாகும். [1][2] இந்த வணிகங்கள் 1970, 1980 மற்றும் 1990 களில் பெண்ணியத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் ஒரு பகுதியாக இருந்தன. [3] பெண்ணிய தொழில்முனைவோர் தங்கள் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக பெண்ணிய பொருளாதார கூட்டணி போன்ற அமைப்புகளை நிறுவினர். [3] பெண்ணிய தொழில்முனைவோர் மூன்று முக்கிய குறிக்கோள்களை நாடினர்: தங்கள் சித்தாந்தத்தை தங்கள் தொழில்கள் மூலம் பரப்புதல், பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், அவர்கள் ஆண்களை பொருளாதார ரீதியாக சார்ந்து இருக்காமல் சுய மேம்பாடு பெறுதல் ஆகிய ஆகும். [4][2] தற்போதும் பெண்ணிய வணிகங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவை ஒப்பீட்டளவில் குறைந்து வருகிறது குறிப்பாக பெண்கள் புத்தகக் கடைகள், 2000 ஆம் ஆண்டிலிருந்து எண்ணிக்கையில் மிகவும் குறைந்து காணப்படுகிறது. [1][4][2][3]
இவற்றில் பல முதன்மையாக இலாப நோக்கத்திற்காக அல்லது சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. பெண்ணிய சுகாதார மையங்கள், கூட்டாக இயங்குகின்றன, அகனள் மதுக்கடைகள் மற்றும் மியூசிக் ஆஃப் தெ 1970 பெண்ணியவாதி வணிகர்கள் சந்திப்பதற்கு வழிவகுத்தது.
பெண்ணிய புத்தகக் கடைகள்
பெண்ணிய புத்தகக் கடைகள் இரண்டாம் அலை பெண்ணிய இயக்கத்தின் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றின.[5] 1983 இல் வட அமெரிக்காவில் சுமார் 100 புத்தகக் கடைகள் இருந்தன, இது ஆண்டுதோறும் $ 400 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையினை எட்டியது. [6] 21 ஆம் நூற்றாண்டில் சுயாதீன புத்தகக் கடைகள் [7] மற்றும் 2016 இல் 20 க்கும் குறைவான பெண்ணிய புத்தகக் கடைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அரிசோனா, டக்சோனில் உள்ள ஆன்டிகோன் புக்ஸ் நிறுவனம் தான் தற்போது உள்ள பெண்ணியவாதிய வணிகக் கடைகளில் உள்ள பழமையான புத்தக கடை ஆகும்.[2] 13 புத்தகக் கடைகள் பெண்ணிய கருத்துக்களைப் பரப்புவதற்கும், கோணல் கோட்பாடுகள், விலங்கு உரிமைகள், அகனள் புனைகதை, ஓரின சேர்க்கை ஆய்வுகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய தகவல்களைப் பற்றிய புத்தகங்களை சிற்பனை செய்வதற்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. [2]
அமேசான் புத்தகக் கடை மற்றும் சில்வர் மூன் புத்தகக் கடை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கடைகளில் இவர்களது வணிகம் நடைபெறுகிறது.
பெண்ணிய உணவகங்கள்
பெண்ணிய உணவகங்களின் ஆரம்ப வடிவம் வாக்குரிமை உணவகங்கள், தேநீர் அறைகள் அல்லது மதிய உணவு அறைகளாக இருந்தது. [8] இங்கு ஐந்து அல்லது பத்து செண்டுகள் எனும் குறைந்த விலையில் உணவு விற்கப்பட்டது. மேலும் அங்கு ஆண்கள் சாப்பிடவும் அனுமதிக்கப்பட்டனர். [8] இருந்த போதிலும் இந்த உணவகங்கள் தங்களது நிறுவனர்கள் மற்றும் நன்கொடையாளர்களுடன் ஏற்பட்ட மோதல்களால் வணிகம் பாதிக்கப்பட்டன. [8] 1910 களில் இருந்த வாக்குரிமை உணவகங்கள் 1970 களில் பெண்ணிய உணவகங்கள் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்தன. [8]
ஏப்ரல் 1972 இல், முதல் பெண்ணிய உணவகம், மதர் கரேஜ், நியூயார்க்கில் டோலோரஸ் அலெக்சாண்டரால் நிறுவப்பட்டது. ப்ளட்ரூட் எனும் சைவ பெண்ணிய உணவகம் மற்றும் புத்தகக் கடையானது 1977 முதல் கனெக்டிகட்டின் பிரிட்ஜ்போர்டில் செயல்பட்டு வருகிறது. [9]