புனித மாற்கு வணக்கத்துக்குரிய பேராலய பசிலிக்கா (Patriarchal Cathedral Basilica of Saint Mark; Basilica Cattedrale Patriarcale di San Marco; பொதுவாக புனித மாற்கு பசிலிக்கா) என்பது வட இத்தாலியிலுள்ள வெனிசு உரோமன் கத்தோலிக்க உயர்மறைவாட்ட பேராயலம் ஆகும். இது நகரிலுள்ள பிரபல்யமிக்க தேவாலயமும் இத்தாலிய பைசண்டைன் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்றும் ஆகும். ஆரம்பத்தில் இது டொஜ் மாளிகையின் சிறு தேவாலயமாக இருந்து, 1807 முதல் நகரின் பேராலயமாக மாறியது. அத்துடன் இது வெனிசுவின் வணக்கத்துக்குரியவரின் இடமுமாகியது.[1]
அதன் செழுமையான வடிவமைப்பு, தங்கத் தரை ஒட்டுக்கலைக் கற்கள் மற்றும் நிலை என்பன வெனிசுக்காரர்களின் செழிப்பை மற்றும் வல்லமையின் அடையாளங்களாகவுள்ளன. 11 ஆம் நூற்றாண்டில் இருந்து இக்கட்டடம் புனைபெயரான "தங்கத் தேவாலயம்" (Chiesa d'Oro ) என்பதால் அறியப்படுகிறது.[2]
குறிப்பு
- ↑ Demus, 1
- ↑ Fodor's Italy 2011. Books.google.com. May 31, 2011. p. 190. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
உசாத்துணை
வெளி இணைப்பு