சென் ஹெலன்ஸ் மலை மே 18, 1980 இல் வெடித்த நிகழ்வு[1] அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. மொத்தம் 57 பேர் கொல்லப்பட்டனர்; 250 வீடுகள், 47 பாலங்கள், 15 மைல் (24 கிமீ) தூர தொடருந்து வழிகள், 185 மைல் (300 கிமீ) தூர நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன[2].