புனித உரோமப் பேரரசு (Holy Roman Empire) நடு ஐரோப்பாவில் மத்திய காலப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பேரரசு ஆகும். இப்பேரரசின் முதலாவது அரசன் உரோமப் பேரரசின் முதலாம் ஒட்டோ (கிபி 962) ஆவான்.[1] அரசாங்கத்தின் செயல்பாடு மன்னருக்கும் ஆட்சிக்குட்பட்டவர்களுக்கும் இடையிலான இணக்கமான ஒத்துழைப்பைச் சார்ந்தது.[2] 15ம் நூற்றாண்டில் இருந்து இப்பேரரசு ஜேர்மன் இனத்தின் புனித ரோமப் பேரரசு என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்