பால சாகித்திய அகாதமி விருதுகள்

பால சாகித்திய அகாதமி விருது சாகித்திய அகாதமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளில், இந்திய எழுத்தாளர்களின் குழந்தைகள் இலக்கியத்தில் பங்களிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அதற்கு முந்தைய ஐந்து வருடங்களின் படைப்புகளைக் கொண்டு இது முடிவு செய்யப்படுகிறது.[1]

விருதுக்கான தகுதி வரையறைகள்

  • குழந்தைகள் புத்தகம் மொழி மற்றும் இலக்கியத்திற்கான ஒரு சிறந்த பங்களிப்பாக இருக்க வேண்டும்
  • குழந்தைகளுக்கான கட்டுக்கதை அல்லது கதை பொழுதுபோக்கு கருதி இருந்தால் அது தகுதி பெறும்.

தமிழ் மொழியில் விருதுகள்

  • 2012-இல் கொ. மா. கோதண்டம் அவர்கள் 'காட்டுக்குள்ளே இசைவிழா' சிறுவர் கதை நூலுக்காகப் பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்றார்
  • 2014-இல் இரா. நடராசன் 23 பேர்களிலிருந்து ஒருவராக இவ் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்[2]. விருதுபெற்ற இவரது படைப்பான “விஞ்ஞான விக்கிரமாதித்தியன் கதைகள்” விக்ரமாதித்தன்-வேதாளம் கதைகளை அறிவியலைச் சார்ந்து அமைக்கப்பட்டுள்ளது.
  • 2015-ஆம் ஆண்டிற்கான விருதினை தேடல் வேட்டை என்ற கவிதை தொகுப்பு எழுதிய செல்லகணபதி வென்றுள்ளார்.[3]
  • ஒட்டுமொத்த குழந்தைகள் இலக்கிய பங்களிப்பை வழங்கியதற்காக 2016–ஆம் ஆண்டுக்கான பால சாகித்திய புரஸ்கார் விருதினை குழ. கதிரேசன் வென்றுள்ளார்[4]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-28. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.
  2. http://timesofindia.indiatimes.com/city/chennai/Tamil-novelist-R-Natarajan-gets-Bala-Sahitya-Akademi-award/articleshow/40793485.cms Tamil novelist R Natarajan gets Bala Sahitya Akademi award
  3. http://sahitya-akademi.gov.in/sahitya-akademi/pdf/yuvapuraskar-2015_e.pdf
  4. "BAL SAHITYA PURASKAR (2010-2016)". Sahitya Akademi. Archived from the original on 2015-06-30.
  5. எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
  6. Tamil writer Ambai wins Sahitya Akademi award

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!