பவன் குமார் சிங் (Pawan Kumar Singh) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பராக்பூரைச் சேர்ந்த அர்ச்சூன் சிங்கின் மகன் ஆவார். பாட்பரா தொகுதியிலிருந்து மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] சட்டமன்ற உறுப்பினராக இருந்த அர்ச்சூன் சிங் பதவி விலகல் செய்ததால் அந்த இடம் காலியானது. நடைபெற்ற இடைத்தேர்தலில், பவன் சிங் பாரதிய சனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3][4] இத்தேர்தலில் மேற்கு வங்கத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மதன் மித்ராவை தோற்கடித்தார்.[5]
தொகுதி
பவன் சிங் பாட்பரா சட்டமன்ற தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அரசியல் கட்சி
பவன் சிங் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்தவர்.
மேற்கோள்கள்