பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம்
பிரெஞ்சு மொழி: Bureau international des poids et mesuresபிஐபிஎம்மின் சின்னம் |
சுருக்கம் | பிஐபிஎம் |
---|
உருவாக்கம் | 20 மே 1875 |
---|
வகை | அரசுகளுக்கிடையேயான அமைப்பு |
---|
தலைமையகம் | |
---|
சேவை பகுதி | உலகெங்கும் |
---|
ஆட்சி மொழி | பிரெஞ்சு (அலுவல்), ஆங்கிலம் |
---|
இயக்குநர் | எம்.ஜே.டி. மில்டன் |
---|
வலைத்தளம் | bipm.org |
---|
பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் (International Bureau of Weights and Measures, பிரெஞ்சு மொழி: Bureau international des poids et mesures), என்பது பன்னாட்டு சீர்தரங்கள் அமைப்பாகும். அனைத்துலக முறை அலகுகளை (SI) பராமரிப்பதற்காக மீட்டர் மாநாட்டின்படி நிறுவப்பட்ட மூன்று நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் பொதுவாக இதன் பிரெஞ்சு முதலெழுத்துக்களால் பிஐபிஎம் (BIPM) என்று அறியப்படுகிறது.
அனைத்துலக முறை அலகுகளை பராமரிக்கும் மற்ற இரு நிறுவனங்களும் அவற்றின் பிரெஞ்சு முதலெழுத்துக்களால் அறியப்படுகின்றன: எடைகள் மற்றும் அளவைகளுக்கான பொது மாநாடு (பிரெஞ்சு மொழி: Conférence générale des poids et mesures) (CGPM) மற்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் குழு (பிரெஞ்சு மொழி: Comité international des poids et mesures) (CIPM).