பனிக்கட்டி வணிகம்

நியூ யார்க் பகுதியில் பனிக்கட்டி வணிகம்; மேலிருந்து: அட்சன் ஆற்றங்கரையில் பனிக்கிடங்குகள்; நியூ யார்க் நகருக்கு இழுத்துச் செல்லப்படும் பனிப் படகுகள்; படகில் இருந்த பனிக்கட்டிகளை இறக்குதல்; கடலோடும் பெருங்கப்பல்களில் சரக்கு ஏற்றப்படுதல்; பனிக்கட்டிகளை நிறுத்தல்; பொது மக்களுக்கு பனிக்கட்டிகள் விற்பனை; வசதி படைத்தவர்களுக்கு விற்பனை; நிறைக்கப்படும் பனிப் பெட்டி; by F. Ray, Harper's Weekly, 30 ஆகத்து 1884

பனிக்கட்டி வணிகம் அல்லது உறைந்த நீர் வணிகம் என்பது 19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் இருந்து இயற்கையாக உறைந்த பனிக்கட்டிகள் வெட்டி எடுக்கப்பட்டு உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பப் பட்டு விற்பனை செய்யப்பட்டதைக் குறிக்கும். அமெரிக்காவின் பிரடெரிக் தீயூடர் என்பவரால் 1806-இல் இவ்வணிகம் தொடங்கப்பட்டது. சனவரி் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள ஏரிகள், குளங்கள் உறைந்து பனிக்கட்டி ஆகி விடும். இவற்றை வெட்டி எடுத்து கப்பலில் எடுத்துச் சென்று பல நாடுகளில் விற்பனை செய்தார். இந்தியாவுக்கும் இத்தகைய பனிக்கட்டிகள் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. இதற்காக பனிக்கட்டிகளை சேமிப்பதற்காக கிடங்குகளும் கட்டப்பட்டன.

இவ்வாறு அனுப்பப் பட்ட பனிக்கட்டிகள் விற்பனைக்கு வருகையில் ஏறத்தாழ பாதி உருகியிருக்கும்.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!