முதலாம் வில்லியம் (William I, இடச்சு: Willem Frederik; 24 ஆகஸ்ட் 1772 – 12 டிசம்பர் 1843) நெதர்லாந்து நாட்டின் முதல் அரசர் ஆவார். இவரே முதல் லக்ஸம்பர்க் பெருங்கோமகனும் ஆவார்.[1][2]
நெதர்லாந்து நாட்டின் முதலாம் வில்லியம் 1813 ஆம் ஆண்டு ஐக்கிய நெதர்லாந்து நாட்டை ஏற்படுத்தினார். இவரே நெதர்லாந்து நாட்டை தன் முடியாட்சியின் கீழ் கொண்டுவந்தார்.
மேலும் மார்ச்சு 16, 1815 ஆம் ஆண்டு லக்ஸம்பர்கின் கோமகன் ஆனார். அதே ஆண்டு ஜூன் 9 ஆம் நாள் முதலாம் வில்லியம் லக்ஸம்பர்க்கின் முதல் பெருங்கோமகன் ஆனார். மேலும் 1839 ஆம் ஆண்டில் லிம்பர்க்கின் கோமகனானார். 1840 ஆம் ஆண்டில் தன்னை அரசர் வில்லியம் பிரடெரிக் என அழைத்துக்கொண்டார்.
மேற்கோள்கள்