1918 ஆண்டு இராச்சியத்திடமிருந்து ஆர்மேனியாவும்அசர்பைஜானும் விடுதலை அடைந்தப் போது ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக குடியிருந்த நகோர்னோ-கரபாக் பகுதி தொடர்பாக இரண்டு நாடுகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. பின்னர் 1923 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இப்பகுதிகளில் தனது அதிகாரத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நகோர்னோ-கரபாக் அசர்பைஜான் சோவியத் சோசலிச குடியரசுல் அமைந்த சுயாட்சி ஒப்லாஸ்ட்டாக ஆட்சி செய்யப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் கடைசி நாட்களில் ஆர்மேனியாவுக்கும் அசர்பைஜானுக்குமிடையே மீண்டும் இப்பகுதி தொடர்பாக சர்ச்சை வழுத்தது.இதன் காரணமாக இரு நாடுகளிடையே நகோர்னோ-கரபாக் போர்1988 முதல் 1994 வரை நடைபெற்றது.
1991டிசம்பர் 10 ஆம் நாள் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி கண்டதையடுத்து, நகோர்னோ-கரபாக் ஒப்லாஸ்டிலும் அண்மித்த சாவுமியன் பகுதியிலும் நாடாத்தப்பட்ட மக்கள் கருத்துக்கணிப்பில், மக்கள் விடுதலைக்காக வாக்களிக்கவே நகோர்னோ-கரபாக் தன்னை குடியரசாக பிரகடனப்படுத்தி அசர்பைஜானிடமிருந்து விடுதலையை அறிவித்தது. ஆனால் இது வரை நகோர்னோ-கரபாக் குடியரசை ஆர்மேனியா உட்பட எந்த நாடோ அல்லது பன்னாட்டு நிறுவனமோ அங்கிகரிக்கவில்லை.
1994 ஆண்டு முதல் நகோர்னோ-கரபாக் உட்பட அண்மைய சில பகுதிகளும் நகோர்னோ-கரபாக் தற்காப்புப் படையினதும் ஆர்மேனிய படையினதும் கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.தற்சமயம் சமாதான பேச்சுவார்த்தை நடந்தவண்ணமுள்ளது.