தீரத் சிங் ராவத் (ஆங்கில மொழி: Tirath Singh Rawat, பிறப்பு:09 ஏப்ரல் 1964) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். 2019 ஆம் ஆண்டு கார்வால் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2019-இல் 17வது மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5] [6][7]
[8][9]
திரிவேந்திர சிங் ராவத் உத்த்ராகண்ட் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதால்[10], மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்த தீரத் சிங் ராவத் பதவி விலகி, 10 மார்ச் 2021 அன்று உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார்.[11][12][13]
பதவி துறப்பு
ஏற்கனவே தீரத் சிங் ராவத் மக்களவை உறுப்பினராக உள்ள நிலையில், உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார். சட்டமன்றத்தில் உறுப்பினராக இல்லாத தீரத் சிங் ராவத், செப்டம்பருக்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் சட்டமன்ற உறுப்பினராக் தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதால் தமது முதலமைச்சர் பதவியைத் துறந்தார்.[14][15]
மேற்கோள்கள்