திரு.பால்பெர் எதிர் திருமதி.பால்பேர் வழக்கு (Balfour v. Balfour) வழக்கு ஆங்கில நீதிமன்றில் இடம்பெற்ற ஒப்பந்தசட்டம் தொடர்பாக முக்கிய கருத்துரைக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றாகும்.இவ் வழக்கு 1919 யூன் 25 ம் திகதி திருமதி பால்பேரால் அவரது கணவரிற்கு எதிராக Married Women's Property Act 1882 கீழ் தொடுக்கப்பட்டது.
வழக்கின் விபரமானது திரு பால்பேர் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் ஒவ்வொர் மாதமும் 3[[பவுண்ட்] பராமரிப்புச் செலவாக தருவதாக திருமதி.பால்பேரிற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.எனினும் அவர் மனைவியை பிரிந்திருந்தபோது அவ்வாக்குறுதிப்படி பணத்தினை அவர் கொடுக்கவில்லை. இதனைப் பெற்றுக்கொடுக்கும்படி திருமதி.பால்பேர் நீதிமன்றினை நாடினார்.
Warrington, Duke and Atkin L. JJ நீதிபதிகளில் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இவ்வழக்கில் கணவனால் கொடுக்கப்பட்ட இவ்வாக்குறுதியானது சட்ட பிணைப்பினை (legally bound) ஏற்படுத்தும் எண்ணத்தினை கொண்டுள்ளதற்கான போதிய ஆதாரம் இல்லாததால் இதன் அடிப்படையில் நீதிமன்றம் இவ் வாய்மொழிமூல உடன்பாட்டை நிறைவேற்றக்கோரி ஆணையிடமுடியாது என தீர்ப்பளித்தது.
இவ்வழக்கிலிருந்து வேடிக்கையான கதைகள், குடும்பவிவகாரங்கள் போன்றன தொடர்பான வாக்குறுதிகள் ஒருபோதும் நீதிமன்றினால் சட்ட பிணைப்புள்ள ஒப்பந்தமாக அங்கீகரிப்பதில்லை.
இவற்றையும் பார்க்க