தாமசு ஏ. மாத்தியூசு ஒரு அமெரிக்க வானியலாளர் ஆவார். 1960 ஆம் ஆண்டில் ஆலன் சாந்தேகுவுடன் ஓவன்சு பள்ளத்தாக்கு வானொலி ஆய்வகத்தில் ஒரு புதிய குறுக்கீட்டளவியைப் பயன்படுத்தி முதல் குவாசர் 3 சி 48 ஐக் கண்டுபிடித்தவர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.[2][3]
மாத்தியூசு 1956 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] அவரது ஆய்வு வழிகாட்டி பார்ட் போக் ஆவார்.[1]
மேற்கோள்கள்