தமிழ் ஐக்கூ முதல் உலக மாநாடு (Tamil Haiku First World Conferences) இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சி தமிழ்ச் சங்கக் கட்டிடத்தில் 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 17 ஆம் தேதியன்று நடைபெற்றது.[1][2] மாநாட்டை தூண்டில் - இனிய நந்தவனம் - தமிழ் கவிதையாளர்கள் இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தின.[3] கல்வியாளர் செளமா இராசரத்தினம் தொடங்கி வைத்தார். ஒன்பது அமர்வுகளாக நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தது. தமிழகம், இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் 150 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஐக்கூ கவிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஐக்கூ வாசிப்பரங்கம், கருத்தரங்கம், பகிர்வரங்கம், கலந்துரையாடல், கவிக்கோ நினைவு ஐக்கூ விருது வழங்குதல், ஐக்கூ நூல்கள் வெளியீடு ஆகிய நிகழ்வுகள் மாநாட்டில் நடைபெற்றன.
திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.லிங்குசாமி, பிருந்தா சாரதி, ஓவியக்கவிஞர் அமுதபாரதி, ஆரூர் தமிழ்நாடன், தங்கம் மூர்த்தி, மு.முருகேஷ், நந்தவனம் சந்திரசேகரன், அமரன், சந்திரா மனோகரன், வதிலை பிரபா, பல்லவி குமார், நீலநிலா சென்பகராசன், கவிநிலா மோகன், முனைவர் ம.ரமேசு, தனலெட்சுமி பாசுகரன், பா.தென்றல் உள்ளிட்ட ஐக்கூ கவிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
நூல்கள் வெளியீடு
தூண்டில் ஐக்கூ சிறப்பு மலர், மு.முருகேஷ் எழுதிய ஞானியின் பச்சைக்கிளி , தங்கம்மூர்த்தியின் மழையின் கையெழுத்து [4] உள்ளிட்ட பல ஐக்கூ கவிதை நூல்கள் மாநாட்டில் வெளியிடப்பட்டன. தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் இலக்கிய விருதுகளில் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயரால் ஐக்கூ கவிஞர்களுக்கும் ஒரு விருதினை வழங்கிட வேண்டுமென்கிற தீர்மானமும் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
மேற்கோள்கள்