டேவிட் மக்-அல்பின்

டேவிட் மக்-அல்பின் ஒரு அமெரிக்க மொழியியலாளர். 1945 ஆம் ஆண்டு பிறந்த இவர், சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பயின்று 1967 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் மடிசனில் உள்ள விசுக்கோசின் பல்கலைக்கழகத்தில் 1970 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டத்தையும், 1972 ஆம் ஆண்டில் முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இவர், திராவிட மொழிகள் தொடர்பில், வரலாற்று மொழியியல், ஒப்பீட்டு மொழியியல் ஆகிய துறைகளில் ஆய்வுகள் செய்துள்ளார். திராவிட மொழிகளுக்கும், மெசொப்பொத்தேமிய நாகரிகக் காலத்தைச் சேர்ந்த ஈல மொழிக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய்ந்த இவர், ஈல-திராவிட மொழிக் குடும்பம் தொடர்பான தனது கருதுகோளை முன்மொழிந்தார்.

வெளி இணைப்புகள்

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!