டேவிட் ஆச்செசன் |
---|
பிறப்பு | 1946 (அகவை 77–78) |
---|
கல்வி கற்ற இடங்கள் | இலண்டன் கிங்சு கல்லூரி கிழக்கு ஆஞ்சிலியா பல்கலைக்கழகம் |
---|
ஆய்வேடு | இயற்பியல் புலச் சரிவு நிலையற்ற தன்மை சுழலும் திரவம் (1971) |
---|
ஆய்வு நெறியாளர் | மைக்கேல் பார்க்கர் கிளவர்டு |
---|
டேவிட் ஜான் ஆச்செசன்(David John Acheson) ( பிறப்பு 1946) என்பவர் ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஜீசசு கல்லூரியில் பயன்பாடு கணிதவியலில் ஆய்வு செய்த பிரித்தானியக் கனிதவியலாளர் ஆவார்.[1]
டேவிட் ஜான் ஆச்செசன் இலண்டனின் துணைநகரமான ஐகேட்டு நகரத்தில் பள்ளிப் படிப்பையும், இலண்டன் கிங்சு கல்லூரியில் கணிதம் மற்றும் இயற்பியல் பிரிவில் 1967 ஆம் ஆண்டில் இளநிலை பட்டமும் படித்தார். மேலும் கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகத்தில் 1971 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார்.[2].1977 ஆம் ஆண்டு ஆக்சுபோர்டு ஜீசசுக் கல்லூரியில் கணித விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார் மற்றும் 2008 ஆம் ஆண்டில் கூட்டு முயற்சியில் பன்னாட்டு ஆசிரியராக ஆனார். இவர் கணிதக் கூட்டமைப்பின் தலைவராக 2010 முதல் 2011 வரை பணியாற்றினார்.இவருக்கு 2013 ஆம் ஆண்டில் கிழக்கு ஏஞ்சலியா பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[3]
ஆரம்ப காலங்களில் வேளாண்மை. புவியமைப்பியல், வான் இயற்பியலில் பாய்ம இயக்கவியல் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். இவரது ஆய்வு 1972 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காந்தப் புலத்தில் 'இயற்பியல் புலச் சரிவு' நிலையற்ற தன்மை சுழலும் திரவம் பற்றியதாகும்.[4] 1976 ஆம் ஆண்டில் நிலையான அமைப்பில் அலை மேல் பிரதிபலிப்பு (I.e பிரதிபலிப்பு குணகமானது ஒன்றை விட அதிகமாக இருக்கும்) என்பது இவரது கண்டுபிடிப்புகளில் முதல் உதாரணமாகும்.
மேற்கோள்கள்
|
---|
பன்னாட்டு | |
---|
தேசிய | |
---|
கல்விசார் | |
---|
மற்றவை | |
---|