ஜீது ஜோசப் |
---|
பிறப்பு | 10 நவம்பர் 1972 (1972-11-10) (அகவை 52) முதோலபுரம், எர்ணாகுளம், கேரளம், இந்தியா |
---|
இருப்பிடம் | திருப்பூணித்துறை |
---|
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித மெர்க்மான் கல்லூரி நிர்மலா கல்லூரி, மூவாட்டுப்புழா |
---|
பணி | - திரைப்பட இயக்குநர்
- திரை எழுத்தாளர்
- தயாரிப்பாளர்
|
---|
செயற்பாட்டுக் காலம் | 2007 முதல் தற்போது வரை |
---|
வாழ்க்கைத் துணை | லிண்டா ஜோசப் |
---|
பிள்ளைகள் | 2 |
---|
ஜீது ஜோசப் (Jeethu Joseph) (பிறப்பு: 1972 நவம்பர் 10) இவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும், திரைக்கதை எழுத்தாளரும் மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். இவர் மலையாள சினிமாவில் முக்கியமாக பணியாற்றுகிறார். இவர் ஒரு சில தமிழ் மற்றும் பாலிவுட் படங்களிலும் பணியாற்றியுள்ளார். ஜீது 2007ஆம் ஆண்டு காவல்துறை நடைமுறைத் திரைப்படமான டிடெக்டிவ் என்றப் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஐந்து வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கினார்: குடும்ப நாடகம் மம்மி & மீ (2010), நகைச்சுவை மை பாஸ் (2012), திரில்லர் மெமரிஸ் (2013), குடும்பம்- த்ரில்லர் திரிஷ்யம் (2013), பழிவாங்கும் திரைப்படம் ஓழம் (2016) மற்றும் அதிரடி-திரில்லர் ஆதி (2018) ஆகியன.[1] இதுவரை அதிக வசூல் செய்த மலையாள படமாக விளங்கிய திரிஷ்யம் வெளியான பிறகு ஜீது பிரபலமடைந்தார். இது திரையரங்க வசூலில் ₹ 50 கோடியை தாண்டிய முதல் மலையாள படமாகும்.[2] ஜீது தமிழில் பாபநாசம் (2015) என்ற படம் மூலமும், இந்தியில் தி பாடி (2019) என்ற திரைப்படம் மூலமும் அறிமுகமானவர் .
ஆரம்ப கால வாழ்க்கை
ஜீது இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் சேர விரும்பினார். ஆனால் ஒரு பொறியியலாளராக வேண்டும் என்று இவரது தந்தை விரும்பினார். பாத்திமா மாதா ஆங்கில நடுத்தரப் பள்ளியில் பயின்ற இவர், பின்னர் மூவாட்டுபுழாவின் நிர்மலா கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[3]
தொழில்
ஆரம்பகால படைப்புகள்
மலையாளத் திரைப்பட இயக்குநர் ஜெயராசனிடம் உதவி இயக்குநராக ஜீது ஜோசப் பீபத்சம் என்றப் படத்தில் பணியாற்றத் தொடங்கினார். அதன்பிறகு, திலீப் நடித்த ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஆனால் அது பலனளிக்கவில்லை. இவர் தொடங்கிய இடத்திற்கு திரும்பி வந்தார்.[3] இதற்கிடையில், ஜீது துப்பறியும் ஒரு வரிக் கதையை உருவாக்கினார். ஆனால் எந்தவொரு தயாரிப்பாளரும் முன்வராத நிலையில், இவரது தாயார் லீலாம்மா ஜோசப் இந்த படத்தை இணைந்து தயாரிக்க முன்வந்தார். இது இவரை முதல் இயக்குனராக மாற்றியது. ஒரு மாதம் சென்றபின், ஒரு தயாரிப்பாளர் தயாரிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி, தயாரிப்பை மேற்கொண்டார். டிடெக்டிவ் என்றப் படம் 2007இல் வெளியிடப்பட்டது. இந்த படம் திரையரங்க வசூலில் வெற்றியடைந்தது.
இவரது அடுத்த படமான மம்மி & மீ திரையரங்க வசூலில் வெற்றி பெற்றது. மம்மி அண்ட் மீ, தயாரிப்பில் மூன்று வருடங்கள் நெருங்கினாலும், இயக்குநராக இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையைக் கொண்டிருந்தது.[3]
இவரது மூன்றாவது படமான மை பாஸும் திரையரங்குகளில் வெற்றி பெற்றது. ஜீதுவின் நான்காவது திரைப்படமான மெமரிஸ், ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர். 2013 இல் வெளியிடப்பட்டது. இதன் திரையரங்க வசூல் நன்றாக இருந்தது.[4][5]
திரிஷ்யம்
2013 ஆம் ஆண்டின் இறுதியில், மோகன்லால் நடித்த திரிஷ்யம் என்ற நாடக-திரில்லர் வெளியானது. இது விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது 2016 வரை அதிக வசூல் செய்த மலையாள படமாகவும், திரியரங வசூலில் ₹ 50 கோடியை தாண்டிய முதல் மலையாள படமாகவும் இருந்தது.[2][3][6][7] மோகன்லாலின் பாத்திரத்தை கமல்ஹாசன் நடிக்க ஜீது இயக்கத்தில் திரிஷ்யம் தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இது தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் மற்ற இயக்குநர்களால் மறுஆக்கம் செய்யப்பட்டது. ஜீது பின்னர் திலீப் நடித்த லைஃப் ஆஃப் ஜோசூட்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் .
தனிப்பட்ட வாழ்க்கை
ஜீது லிண்டா என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். லிண்டா மலையாள சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார் .
திரைப்படங்கள்
விருதுகள்
- 2013 - 44 வது கேரள மாநில திரைப்பட விருதுகள் - சிறந்த பிரபலமான படம் - திரிஷ்யம்
- 2013 - வனிதா திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் - திரிஷ்யம் [8][9]
- 2013 - கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்க விருதுகள் - சிறந்த இயக்குநர் - திரிஷ்யம் [10][11]
- 2013 - ஜெய்ஹிந்த் தொலைக்கட்சித் திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் - திரிஷ்யம்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்