ஜாக்கி சான்

ஜாக்கி சான்
2012 இல் ஜாக்கி சான்
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உறுப்பினர்
பதவியில்
மார்ச் 2013 – மார்ச் 2023
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சான் கொங் -சாங் (陳港生)[1][2]

7 ஏப்ரல் 1954 (1954-04-07) (அகவை 70)
பிரித்தானிய ஆங் கொங்
இறப்புமனைவி
இளைப்பாறுமிடம்மனைவி
பிள்ளைகள்2
பெற்றோர்
  • மனைவி
வேலை
  • ஆங்காங் நடிகர்
  • இயக்குநர்
  • எழுத்தாளர்
  • தயாரிப்பாளர்
  • தற்காப்புக் கலைஞர்
இணையத்தளம்jackiechan.com
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
  • கந்தூப்
  • ஆங் கொங் அங்கிலப் பரப்பிசை
  • ஜே பாப்
இசைத்துறையில்1962–தற்போது வரை
Chinese name
பண்டைய சீனம் 陳港生
நவீன சீனம் 陈港生
Literal meaningChan the [Hong] Kong-born
மேடைப் பெயர்
பண்டைய சீனம் 成龍
நவீன சீனம் 成龙
Literal meaningடிராகனாக மாறுதல்
இயற்பெயர்
பண்டைய சீனம் 房仕龍
நவீன சீனம் 房仕龙

ஃபாங் சிலோங் [a] (பிறப்பு சான் காங்-சாங் [b] 7 ஏப்ரல் 1954 ) மேடைப் பெயரான ஜாக்கி சான் என்று தொழில் ரீதியாக அறியப்பட்டவர், [c] ஓர் ஆங்காங் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர், தற்காப்புக் கலைஞர் ஆவார், இவர் சூத்திரக்கோல் கம்பக்கூத்துச் சண்டை பாணி, வேடிக்கையான சண்டைக்காட்சிகளின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். திரைப்படத் துறையில் வருவதற்கு முன்பு, சீனா நாடக அகாதமியின் செவன் லிட்டில் ஃபார்ச்சூன்களில் ஒருவராக இருந்தார், அங்கு இவர் கம்பக்கூத்து, தற்காப்புக் கலைகள், நடிப்பு ஆகியவற்றைப் பயின்றார். 1960 களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். உயிர் வாழ்பவர்களில் அதிக முறை சண்டைக்காட்சிகளில் நடித்தவர் எனும் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார், மேலும் சினிமா வரலாற்றில் செல்வாக்குமிக்க தற்காப்புக் கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[3][4]

பல ஆங்காங் திரைப்படங்களில் சண்டைக் கலைஞராகத் தோன்றிய பிறகு, 1978-ஆம் ஆண்டு வெளியான ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷாடோ எனும் குங்ஃபூ அதிரடி நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். பின்னர் 1978 ஆம் ஆண்டின் டிரங்கன் மாஸ்டர், 1980 ஆம் ஆண்டின் தி யங் மாஸ்டர் போன்ற குங் ஃபூ அதிரடி நகைச்சுவைத் திரைப்படங்களில் நடித்தார். 1979 ஆம் ஆண்டில், தி ஃபியர்லெஸ் ஹைனா மூலம் இயக்குநராக அறிமுகமானார், இது வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது.

ஆரம்பகால வாழ்க்கை

ஜாக்கிசான் 7 ஏப்ரல் 1954 இல் பிரித்தானிய ஆங்காங்கில் சான் காங்-சாங் என்ற பெயரில் சீன உள்நாட்டுப் போரிலிருந்து அரசியல் அகதிகளாக வந்த சார்லஸ் மற்றும் லீ-லீ சான் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். சுமார் 1937 ஆம் ஆண்டில், சானின் தந்தை, முதலில் ஃபாங் டாலோங் என்று பெயரிடப்பட்டு, சீனாவின் தேசியவாத அரசு தலைமை உளவாளியும் படைத்துறைக் கட்டளையாளருமான டாய் லியிடம் ரகசிய முகவராக சிறிது காலம் பணியாற்றினார்.[5] கம்யூனிசஅரசாங்கத்தால் கைது செய்யப்படுவார் என்ற பயத்தில், சானின் தந்தை 1940 களில் பிரித்தானிய ஆங்கொங்கிற்குத் தப்பிச் சென்று அவரது குடும்பப்பெயரை ஃபாங்கில் இருந்து சான் என்று மாற்றினார். சான் என்பது இவரது மனைவி சான் லீ-லீயின் குடும்பப்பெயர் ஆகும். 1990களின் பிற்பகுதியில் தனது சீனப் பெயரை ஃபாங் ஷிலோங் என்று மாற்றினார், இவரது உறவினர்களின் வம்சாவளிப் புத்தகத்தின் படி இவருக்கு பெயரிடப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சானின் மூதாதையர் மரபு அன்ஹுயியின் வுஹுவில் அமைந்துள்ளது. [6][7][8][9]

திரைப்பட வாழ்க்கை

தனது ஐந்து வயதில் குழந்தை நட்சத்திரமாக சிறிய வேடங்களில் நடித்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தனது எட்டாவது வயதில், பிக் அண்ட் லிட்டில் வோங் டின் பார் (1962) என்ற திரைப்படத்தில் தனது சக "லிட்டில் ஃபார்ச்சூன்ஸ்" குழுவினர் சிலருடன் தோன்றினார், இதில் லி லி-ஹுவா இவரது தாயாக நடித்தார். அடுத்த ஆண்டு, இளம் நடிகர் யென் சுனின் 1964 ஆம் ஆண்டு வெளியான லியாங் ஷான் போ மற்றும் சு யிங் தை ஆகிய திரைப்படங்களில் நடித்தார், மேலும் கிங் ஹூவின் இயக்கத்தில் 1966 ஆம் ஆண்டு வெளியான கம் டிரிங்க் வித் மீ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.[10] 1971 ஆம் ஆண்டில், மற்றொரு குங் ஃபூ திரைப்படமான எ டச் ஆஃப் ஜென் படத்தில் கதாபாத்திரத்தில் தோன்றிய பிறகு, சான் சூ மூவின் கிரேட் எர்த் பிலிம் கம்பெனிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[11]

சொந்த வாழ்க்கை

1982 ஆம் ஆண்டில், சான் தைவானிய நடிகையான ஜோன் லினை மணந்தார். இவர்களின் மகன், பாடகர் மற்றும் நடிகர் ஜெய்ஸி சான் அதே ஆண்டில் பிறந்தார்.[12]

சான் எலைன் என்ஜி யி-லெயுடன் திருமணத்திற்கு புறம்பான உறவைக் கொண்டிருந்தார், மேலும் இந்தத் தம்பதியினருக்கு எட்ட என்ஜி சோக் லாம் என்ற மகள் உள்ளார், அவர் 18 சனவரி 1999 அன்று பிறந்தார். சான் , எலைனுக்கு மாதந்தோறும் $70,000 அவரது வாழ்க்கைச் செலவுக்காக அனுப்பியதாகவும், சான், சாங்காய்க்கு குடிபெயர்ந்தபோது $600,000 கொடுத்ததாகக் கூறப்பட்டாலும், பின்னர் அந்த பரிவர்த்தனைகள் எலைனின் வழக்கறிஞரால் இல்லை என்று கூறப்பட்டது.[13][14][15][16]

மேற்கோள்கள்

  1. சீன மொழி: 房仕龍
  2. சீன மொழி: 陳港生
  3. சீன மொழி: 成龍; பின்யின்: Chéng Lóng; Jyutping: sing4 lung4; Cantonese Yale: Sìhng Lùhng; பொருள். Becoming the dragon
  1. "Biography". Jackie Chan's Website. பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  2. Yang, Jeff (17 January 2013). "Why Did Jackie Chan Body Slam America?". The Wall Street Journal. Archived from the original on 2013-01-21.
  3. https://faroutmagazine.co.uk/jackie-chan-changed-action-cinema-forever/
  4. "Why Jackie Chan is the best action star of all time". 12 October 2020.
  5. 張婉婷 (director) (2003). Traces of a Dragon: Jackie Chan and His Lost Family (documentary). Archived from the original on 2022-03-10.
  6. "成龙芜湖认亲首次见到同父兄弟 引当地轰动(图)". 2013-09-03. பார்க்கப்பட்ட நாள் 2024-08-31.
  7. 張婉婷 (director) (2003). Traces of a Dragon: Jackie Chan and His Lost Family (documentary). Archived from the original on 2022-03-10.
  8. Chengyan (2013). "Jackie Chan visited his lost family in Anhui". Sina Corp. Archived from the original on 10 July 2021. பார்க்கப்பட்ட நாள் 10 July 2021.
  9. "Jackie Chan – Actor and Stuntman". BBC. 24 July 2001. பார்க்கப்பட்ட நாள் 28 February 2012.
  10. "Come Drink With Me (1966)". Database entry. Hong Kong Cinemagic. Archived from the original on 14 July 2016. பார்க்கப்பட்ட நாள் 29 February 2012.
  11. (1998).Who Am I?, Star file: Jackie Chan[DVD].Universe Laser, Hong Kong.
  12. Chan, Jackie. "Jackie Chan Biography". Official website of Jackie Chan. பார்க்கப்பட்ட நாள் 25 July 2016.
  13. "Jackie Chan's Daughter Is Homeless & Living Under a Bridge Due To Her 'Homophobic' Parents". 2 May 2018.
  14. "Jackie Chan refused to help his daughter's mother, says lawyer". The Straits Times. 31 March 2017.
  15. "Fans desert Jackie Chan". http://news.bbc.co.uk/2/hi/entertainment/696856.stm. 
  16. "小龍女富貴臉 像房祖名 ("Dragon"'s daughter has a wealthy appearance; looks like Jaycee Chan)". 20 May 2009. Archived from the original on 25 May 2010. பார்க்கப்பட்ட நாள் 1 March 2012.

Strategi Solo vs Squad di Free Fire: Cara Menang Mudah!