1805இல் குவாங்டொங் கடற்கொள்ளையர் கூட்டம் (400 கப்பல்கள், 40,000–60,000 கடற் கொள்ளையர்கள் மற்றும் 1810இல் தனிப்பட்ட முறையில் 24 கப்பல்கள், 1,433 கொள்ளையர்கள்
செங் யி சாவ் ( Zheng Yi Sao ) (பிறப்பு சி யாங்; 1775-1844), சி சியாங்கு, சேக் யூங் மற்றும் சிங் சிக் என்றும் அழைக்கப்படும் இவர், 1801 [1] முதல் [2] 1810 வரை தென் சீனக் கடலில் செயல்பட்ட ஒரு சீனக் கடற்கொள்ளைக் கூட்டத்தின் தலைவராக இருந்தார்.
1775 இல் சி யாங் எனப் பிறந்த இவர் 1801 இல் 26 வயதில் செங் யி என்ற கடற்கொள்ளையாளரை மணந்தார். குவாங்டொங் மக்களால் இவருக்கு செங் யி சாவ் ("செங் யியின் மனைவி") என்று பெயரிடப்பட்டது. [3][4] 1807 இல் இவரது கணவர் இறந்த பிறகு, இவர் அவரது வளர்ப்பு மகன் சாங் பாவோவின் ஆதரவுடன் கடற்கொள்ளையர் கூட்டமைப்பைக் வலுப்படுத்தினார். பின்னர் அவருடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டார். குவாங்டொங் கடற்கொள்ளையர் கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வமற்ற தளபதியாக, 1805 இல் இவரது கடற்படை 400 கப்பல்கள் மற்றும் 40,000 முதல் 60,000 கடற்கொள்ளையர்களைக் கொண்டிருந்தது.[5][6] இவரது கப்பல்கள் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம், போர்த்துகல் பேரரசு மற்றும் சிங் இராச்சியம் போன்ற பல பெரிய சக்திகளுடன் மோதலில் ஈடுபட்டன.[7]
1810 ஆம் ஆண்டில், செங் யி சாவ் அதிகாரிகளிடம் சரணடைந்தார். அந்த நேரத்தில் இவர் தனிப்பட்ட முறையில் 24 கப்பல்கள் மற்றும் 1,400 கடற்கொள்ளையர்களை இவர் கட்டுப்படுத்தி வந்தார். இவர் 1844 இல் தனது 68 வயதில் இறந்தார். இவர் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பெண் கடற்கொள்ளையர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார்.[8][9]
ஆரம்ப கால வாழ்க்கை
செங் யி சாவ் 1775 இல் குவாங்டொங்கின் சின்கூய் பகுதியில் பிறந்தார்.[10] குவாங்டொங்கில் உள்ள ஒரு மிதக்கும் படகிலிருந்த விபச்சார விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம்.
திருமணம்
1801 ஆம் ஆண்டில், செங் யி என்ற கடற்கொள்ளையரை இவர் மணந்தார். [6][11] இவரது கணவருக்கு சாங் பாவோ என்ற ஒரு வளர்ப்பு மகன் இருந்தான். சாங்கிற்கு 15 வயதாக இருந்தபோது 1798 ஆம் ஆண்டில் அவனையும் கடற்கொள்ளையனாக ஈடுபடுத்தினார். [5]
தலைமைப் பதவிக்கு வருதல்
1807 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, செங் யி கடலில் விழுந்து இறந்து போனார்.[5] கடற்கொள்ளைக்கூட்டத்தை செங் யின் உறவினர்களின் ஆதரவின் மூலம், இறந்த தனது கணவரின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டார். செங் யி சாவோ, கூட்டத்திலிருந்த பல்வேறு பிரிவுகளை சமப்படுத்தினார்.[12][1] கூட்டமைப்பைக் கட்டுப்படுத்திய பிறகு, செங் யி சாவோ மற்றும் தனது கணவனின் வளர்ப்பு மகன் சாங் பாவோ இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். [1][3]
பின்னர் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து பல்வேறு கடல் கொள்ளைகளில் ஈடுபட்டார்.
இறப்பு
1844 ஆம் ஆண்டில், செங் யி சாவோ தனது 68 அல்லது 69 வயதில் இறந்தார். குவாங்டொங்கைச் சுற்றியுள்ள ஒரு பிரபலமற்ற சூதாட்ட வீட்டின் உரிமையாளராக தனது இரண்டாவது கணவரின் மரணத்திற்குப் பிறகு ஒப்பீட்டளவில் அமைதியான வாழ்க்கையை நடத்தினார்.[13]
Borges, Jorge L. (1985). A Universal History of Infamy. Translated by di Giovanni, Norman T. Harmondsworth, Middlesex: Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780140085396.
Monteiro, Saturnino (2013). Portuguese Sea Battles Volume VIII: Downfall of the Empire 1808-1975. Translated by Mesquita, Carlos W. Lisbon: Saturnino Monteiro. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9789899683679.
Murray, Dian H. (1987). Pirates of the South China Coast, 1790-1810. Stanford, California: Stanford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்9780804713764.