சுவர்ணா ராம் |
---|
|
பஞ்சாப் அரசாங்க அமைச்சர் தொழில்நுட்ப கல்வி தொழில்துறை பயிற்சி சமூக பாதுகாப்பு |
---|
பதவியில் 2007–2012 |
துணை சபாநாயகர், இந்திய பஞ்சாபின் சட்டமன்றம் |
---|
பதவியில் 18 சூன் 1997 – 26 சூலை 1997 |
|
தனிப்பட்ட விவரங்கள் |
---|
பிறப்பு | 1939/1940 |
---|
இறப்பு | 1 ஏப்ரல் 2023 (வயது 83) |
---|
தேசியம் | இந்தியர் |
---|
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
---|
வேலை | அரசியல்வாதி |
---|
|
சுவர்ணா ராம் (Swarna Ram) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் அரசாங்கத்தில் தொழில்நுட்பக் கல்வி, தொழில்துறை பயிற்சி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சராக இருந்தார். [1] [2] முன்னதாக 1997 ஆம் ஆண்டு சூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 1997 ஆம் ஆண்டு சூலை மாதம் 26 ஆம் தேதி வரை பஞ்சாப் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகவும் இருந்தார். 20223 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று சுவர்ணா ராம் இறந்தார்.
தொகுதி
சுவர்ணா ராம் 1997 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை பக்வாரா சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார் [3]
அரசியல் கட்சி
சுவர்ணா ராம் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். [4]
மேற்கோள்கள்