சுதாகர் சிங் (Sudhakar Singh) என்பவர் பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சுதாகர் சிங் இராச்டிரிய ஜனதா தளம் மாநில தலைவர் ஜக்தானந்த சிங்கின் மகன் ஆவார். சிங் தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரிமல் கல்லூரியில் பட்டப்படிப்பினை முடித்துள்ளார். சிங் பீகாரிலும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் இராச்டிரிய ஜனதா தளம் சார்பில் ராம்கட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][3][4]
மக்களவை உறுப்பினராக
சுதாகர் சிங் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் பக்ஸர் மக்களவைத் தொகுதியில் இராச்ட்டிரிய ஜனதா தளம் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார்.[5][6]
மேற்கோள்கள்