சான் பிரான்சிஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
San Francisco State University |
முந்தைய பெயர்கள் | சான் பிரான்சிசுக்கோ அரசுப் பொதுப் பள்ளி (1899–1921) சான் பிரான்சிசுக்கோ அரசு ஆசிரியர் கல்லூரி (1921–35) சான் பிரான்சிசுக்கோ அரசு கல்லூரி (1935–72) கலிபோர்னியா அரசுப் பல்கலைக்கழகம், சான் பிரான்சிசுக்கோ (1972-74) |
---|
குறிக்கோளுரை | Experientia Docet (இலத்தீன்) |
---|
| பட்டறிவே கற்றுத் தரும் |
---|
வகை | பொது |
---|
உருவாக்கம் | 1899 |
---|
நிதிக் கொடை | $55.2 மில்லியன் (2012)[1] |
---|
கல்வி பணியாளர் | 1,506[2] |
---|
நிருவாகப் பணியாளர் | 2,010[2] |
---|
மாணவர்கள் | 29,905 [3] |
---|
பட்ட மாணவர்கள் | 26,156 |
---|
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 3,749 |
---|
| 193 (Fall 2013)[4] |
---|
அமைவிடம் | சான் பிரான்சிசுக்கோ அரசுப் பல்கலைக்கழகம் 1600 ஹாலோவே அவென்யூ சான் பிரான்சிசுக்கோ, CA 94132 , , , ஐக்கிய அமெரிக்கா |
---|
வளாகம் | நகர்ப்புற வளாகம், 141.61 ஏக்கர்கள் (57.31 ha)[5] |
---|
நிறங்கள் | கத்தரி நீலம், தங்க நிறம் |
---|
தடகள விளையாட்டுகள் | என்.சி.ஏ.ஏ. II 11 வார்சிட்டி ஸ்போர்ட்ஸ் |
---|
நற்பேறு சின்னம் | அல்லிகேட்டர் |
---|
சேர்ப்பு | கலிபோர்னியா அரசுப் பல்கலைக்கழகம் |
---|
இணையதளம் | http://www.sfsu.edu |
---|
|
சான் பிரான்சிசுக்கோ அரசுப் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிசுக்கோவில் உள்ளது. இது கலிபோர்னியா அரசுப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இங்கு 118 இள நிலைப் பாடப்பிரிவுகளும், 94 முது நிலைப் பாடப் பிரிவுகளும், 5 முனைவர் பாடங்களும் கற்பிக்கின்றனர்.[5][6][7]
கல்வி
இங்கு உருவாக்கக் கலை, வணிகம், கல்வி, இனங்கள், நலவாழ்வு, அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு பாடப்பிரிவுகளைப் படிக்கின்றனர்.
அங்கீகாரம்
இதை பல்கலைக்கழகத்திற்கான அங்கீகார ஆணையம் அங்கீகரித்துள்ளது. இந்த ஆணையம் மேற்கத்திய பள்ளி மற்றும் கல்லூரிகளின் கூட்டமைப்பைச் சேர்ந்தது.[8]
வளாகம்
மாணவர்களுக்கான உணவு விடுதியும், கருத்தரங்கக் கூடங்களும் உள்ளன.
விளையாட்டு
இங்கு பேஸ்பால், கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட 11 விளையாட்டுகளை விளையாடுகின்றனர்.
இங்குள்ள குழுக்கள் கலிபோர்னியா மாகாண அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இங்கு படித்த 3 மாணவர்கள் பெரிய அளவிலான பேஸ்பால் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இங்கு படித்த 13 மாணவர்கள் தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
குத்துச்சண்டைப் பிரிவிலும் மாணவர் குழுக்கள் உண்டு. நாற்பது ஆண்டுகளாக, குத்துச்சண்டை விளையாட்டில் தேசிய அளவிலான வெற்றிக் கோப்பையைப் பெற்றுள்ளனர்.
சான்றுகள்
இணைப்புகள்