சான் ஜுவான் ஆறு (San Juan River), நடு அமெரிக்கா நாடான நிக்கராகுவாவின் மேற்கில் உள்ள நிக்கராகுவா ஏரியில் உற்பத்தியாகி, நிக்கராகுவா-கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் எல்லை வழியாக பாய்ந்து, தென் கிழக்கில் கரிபியக் கடலில் கலக்கிறது இந்த ஆற்றின் நீளம் 192 கிலோ மீட்டர் (110 (மைல்)ஆகும். இந்த ஆறு நிக்கராகுவா மற்றும் கோஸ்ட்டா ரிக்கா நாடுகளின் எல்லையாக அமைந்துள்ளது. ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜுவான் ஆற்றின் நீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை கோஸ்ட்டா ரிக்கா நாட்டிற்கு உள்ளது. ஆனால் ஆறு நிக்கராகுவா நாட்டிற்கு சொந்தம்.
நிக்கராகுவா கால்வாய்த் திட்டம்
19ஆம் நூற்றாண்டில் ஜுவான் ஆறு மற்றும் நிக்கராகுவா ஏரிகளை இணைக்கும் கால்வாய்களை வெட்டி, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இணைக்கும் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்த இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.[1][2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்