சான் ஒசே (San José) கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1738 இல் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் 346,799 பேர் வசிக்கிறார்கள்.
இலத்தீன் அமெரிக்க நகரங்களில் சான் ஒசே அதன் உயர்தர வாழ்க்கை,[1] பாதுகாப்பு, உலகமயமாக்கல் நிலை, சுற்றுச்சூழல் செயல்திறன், பொது சேவை[2] மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்காக குறிப்பிடத்தக்கது ஆகும். 2012 இல், சான் ஒசே பிராந்தியத்தில் மிகவும் பாதுகாப்பான, வன்முறை குறைந்த நகரங்களில் ஒன்றாகும்.[3]